MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இந்திய பாக்ஸ் ஆபிஸில் முதலிடம்.. 2022-ல் அசுர வளர்ச்சி கண்ட கன்னட சினிமா - காரணமாக இருந்த 5 படங்கள் ஒரு பார்வை

இந்திய பாக்ஸ் ஆபிஸில் முதலிடம்.. 2022-ல் அசுர வளர்ச்சி கண்ட கன்னட சினிமா - காரணமாக இருந்த 5 படங்கள் ஒரு பார்வை

கே.ஜி.எஃப் 2 முதல் காந்தாரா வரை 2022-ல் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான 5 கன்னட படங்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

3 Min read
Author : Ganesh A
Published : Nov 01 2022, 01:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

கன்னட படங்கள் என்றால் ஒரு காலத்தில் மீம்ஸ் போடுவதற்கும், ட்ரோல் செய்வதற்கும் பஞ்சமில்லாமல் இருந்து வந்தது. கன்னட சினிமாவை பொருத்தவரை, பிறமொழிகளில் வெற்றிபெற்ற படங்களை ரீமேக் செய்வதையே வழக்கமாக வைத்திருந்தனர். குறிப்பாக தமிழில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படங்கள் கன்னட மொழியில் ரீமேக் ஆகும்போது கடுமையான விமர்சனங்களை சந்திக்கும். அதற்கு சான்றாக வருத்தப்படாத வாலிபர் சங்கம், களவாணி, தேவர் மகன், பேரழகன், பிதாமகன், காஞ்சனா போன்ற படங்களை சொல்லலாம். இந்த படங்களெல்லாம் தமிழில் சக்கைப்போடு போட்ட படங்கள். ஆனால் அதனை ரீமேக் என்கிற பெயரில் கன்னடத்தில் படுமோசமாக எடுத்து வைத்திருந்தனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
27

இவ்வாறு கேலி கிண்டலுக்கு ஆளாகி வந்த கன்னட திரையுலகிற்கு திருப்புமுனை ஏற்படுத்திய படம் என்றால் அது யாஷ் நடித்த கே.ஜி.எஃப் திரைப்படம் தான். கடந்த 2018-ம் ஆண்டு ரிலீசான இப்படத்தை பார்த்து இந்திய திரையுலகமே வியந்து போனது. இதேபோல் கன்னடத்தில் வெளியான தியா, முஃப்டி போன்ற படங்களும் ஏகோபித்த வரவேற்பை பெற்றன. குறிப்பாக முஃப்டி படத்தை தழுவி தான் தற்போது சிம்பு நடிப்பில் உருவாகும் பத்து தல திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது.

2022-ம் ஆண்டு கன்னட சினிமாவிற்கு ஒரு பொற்காலமாக அமைந்துள்ளன. குறிப்பாக இந்த ஆண்டில் மட்டும் கன்னடத்தில் வெளியான 5 திரைப்படங்கள் 100 கோடிக்கு மேல் வசூலித்து வேறலெவல் வெற்றியை பெற்றுள்ளன. இதனால் இந்திய திரையுலகின் பார்வையே கன்னட சினிமா பக்கம் திரும்பி உள்ளது. அந்த வகையில் 2022-ல் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான 5 கன்னட படங்களைப் பற்றி தற்போது பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... GP muthu : தனது சோகத்தை சொல்ல ஆளில்லாமல் தவிக்கும் ஜிபி முத்து...கிண்டலடிக்கும் ரசிகர்கள்

37

கே.ஜி.எஃப் 2

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடித்திருந்த கே.ஜி.எஃப் 2 திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டன்று ரிலீசானது. சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் உலகளவில் 1250 கோடிக்கு மேல் வசூலித்து பிரம்மாண்ட வசூல் சாதனை படைத்தது. இந்த ஆண்டு இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளில் வெளியான படங்களோடு ஒப்பிடுகையில் அதிகம் வசூலித்து 2022-க்கான இந்திய பாக்ஸ் ஆபிஸில் நம்பர் 1 இடத்தில் உள்ளது கே.ஜி.எஃப் 2. ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருந்தது.

47

காந்தாரா

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த படம் காந்தாரா. இப்படம் கடந்த செப்டம்பர் 30-ந் தேதி வெளியானது. கன்னடத்தில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் டப் செய்யப்பட்டு கடந்த அக்டோபர் 14-ம் தேதி இந்தியிலும் அக்டோபர் 15-ந் தேதி தமிழ் மற்றும் தெலுங்கிலும், அக்டோபர் 20-ந் தேதி மலையாளத்திலும் வெளியிடப்பட்டது. வெறும் 16 கோடி பட்ஜெட்டில் மட்டும் எடுக்கப்பட்ட இப்படம் தற்போது உலகளவில் ரூ.300 கோடியைக் கடந்து வசூல் சாதனையுடன் வெற்றிநடை போட்டு வருகிறது.

57

விக்ராந்த் ரோனா

சுதீப் நடிப்பில் வெளியான படம் விக்ராந்த் ரோனா. கடந்த ஜூலை மாதம் வெளியான இப்படத்தை அனூப் பண்டாரி இயக்கி இருந்தார். பான் இந்தியா படமாக ரிலீசான இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்ணாண்டஸும் நடித்திருந்தார். சுமார் 100 பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் உலகளவில் ரூ.210 கோடி வசூலித்து கன்னடத்தில் அதிக வசூல் ஈட்டிய படங்களின் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.

67

ஜேம்ஸ்

கடந்த ஆண்டு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்த புனீத் ராஜ்குமார் கடைசியாக நடித்த திரைப்படம் தான் ஜேம்ஸ். 70 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஆக்‌ஷன் திரில்லராக உருவான இப்படத்தை சேத்தன் குமார் என்பவர் இயக்கி இருந்தார். இப்படத்தில் புனித் ராஜ்குமாருக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடித்திருந்தார். கடந்த மார்ச் மாதம் 17-ந் தேதி பிரம்மாண்டமாக ரிலீசான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.151 கோடி வசூலித்து சாதனை படைத்தது.

77

777 சார்லி

ரக்‌ஷித் ஷெட்டி நடிப்பில் வெளியான படம் 777 சார்லி. கிரண் ராஜ் இயக்கத்தில் வெளியான இப்படம் 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இருந்தது. கடந்த ஜூன் மாதம் திரையரங்குகளில் ரிலீசான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.105 கோடி வசூலித்து கன்னட திரையுலகின் வெற்றிப்படங்களின் பட்டியலில் இடம்பிடித்து உள்ளது.

இதையும் படியுங்கள்... அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை சமந்தா- அந்த நோய் பற்றி தெரியுமா உங்களுக்கு?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Top 10 Indian Actors: டாப் 10 நடிகர்கள் லிஸ்ட்! முதலிடத்தை இழந்த விஜய்! அட! தளபதி இடத்தை பிடித்தது இவரா?
Recommended image2
Now Playing
கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டராக அதகளம் பண்ணிய அஜித்... வைரலாகும் ‘தல’யின் கிரிக்கெட் வீடியோ !
Recommended image3
Chinna Marumagal : ஷூட்டிங் ஸ்பாட்டில் மூச்சுத்திணறல்... அவசர அவசரமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட சின்ன மருமகள் சீரியல் ஹீரோ நவீன்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved