Asianet News TamilAsianet News Tamil

திருநங்கைனு ஒதுக்குனாங்க... கண்ணீர்மல்க சோகக் கதையை சொன்ன ஷிவின் - கலங்கிப்போன பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள திருநங்கை போட்டியாளரான ஷிவின், தன் வாழ்க்கைக் கதையை கூறிய புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

First Published Oct 19, 2022, 1:04 PM IST | Last Updated Oct 19, 2022, 1:04 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு முதல் திருநங்கைகளுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சீசனில் திருநங்கை போட்டியாளராக நமீதா மாரிமுத்து கலந்துகொண்டார். ஒருவாரம் மட்டுமே கலந்துகொண்ட அவர், மருத்துவ ரீதியிலான பிரச்சனை காரணமாக அந்நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.

இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியிலும் திருநங்கை போட்டியாளர் ஒருவர் கலந்துகொண்டுள்ளார். அவர் தான் ஷிவின். மாடலிங் துறையில் சிறந்து விளங்கும் ஷிவின், சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தார். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அவர் கதை சொல்லும் நேரம் டாஸ்கில் தன் வாழ்க்கைக் கதையை சொல்லி உள்ளார்.

இதையும் படியுங்கள்... விக்ரம் ஜோடியாக ‘பூ’ பார்வதி... முக்கிய ரோலில் சார்பட்டா நடிகர்..! சியான் 61 படத்தின் விறுவிறு அப்டேட்ஸ் இதோ

தனக்கு வேலையே கிடைக்காது, எங்கையாவது பிச்சை எடுத்திருவேனோ என்கிற பயத்தில் தான் தனது பெற்றோர் தன்னை சிங்கப்பூர் அனுப்பி வைத்ததாகவும், அதன்பின் தன் தாய் தன்னிடம் பேசமாட்டேன் என சொல்லிவிட்டதாகவும் கண்ணீர்மல்க தெரிவித்தார். 

பாசம் இல்லாமல், படிப்பு இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் திருநங்கைகளின் நிலைமை மாற வேண்டும் என்றால், என்னைமாதிரி இருப்பவர்களின் கதைகளும் இந்த சமூகத்தில் கேட்கப்படனும்னு நினைச்சு தான் எடுத்த முடிவு தான் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி என்று அவர் கூறியதை கேட்டு சக போட்டியளர்களும் கலங்கினர்.

இதையும் படியுங்கள்... 2022-ல் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டாப்10 படங்களின் பட்டியல்! லிஸ்ட்லயே இல்லாத அஜித்.. ஆதிக்கம் செலுத்திய விஜய்

Video Top Stories