- Home
- Cinema
- விக்ரம் ஜோடியாக ‘பூ’ பார்வதி... முக்கிய ரோலில் சார்பட்டா நடிகர்..! சியான் 61 படத்தின் விறுவிறு அப்டேட்ஸ் இதோ
விக்ரம் ஜோடியாக ‘பூ’ பார்வதி... முக்கிய ரோலில் சார்பட்டா நடிகர்..! சியான் 61 படத்தின் விறுவிறு அப்டேட்ஸ் இதோ
பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் சியான் 61 படத்தில் ஹீரோயினாக பூ பார்வதியும், முக்கிய ரோலில் நடிக்க சார்பட்டா நடிகரும் தேர்வாகி உள்ளனர்.

நடிகர் விக்ரமின் 61-வது படத்தை பா.இரஞ்சித் இயக்குகிறார். இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படாததால், தற்போது தற்காலிகமாக சியான் 61 என அழைத்து வருகின்றனர். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார். ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கே.ஜி.எஃப்-ஐ மையமாக வைத்து இப்படம் தயாராகிறது.
சியான் 61 படத்தின் ஷூட்டிங் நேற்று முதல் தொடங்கியது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஆந்திராவின் கடப்பா மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. அங்கு 10 நாட்கள் ஷூட்டிங் நடத்த திட்டமிட்டுள்ள படக்குழு, அடுத்தகட்ட படப்பிடிப்பை ராமேஸ்வரத்தில் நடத்த உள்ளனர். இதனிடையே இப்படத்தில் ஹீரோயின் யார் என்கிற குழப்பம் கடந்த சில தினங்களாக நீடித்து வந்தது.
இதையும் படியுங்கள்... வெற்றிமாறனின் பேட்டைக்காளி முதல் அமலாவின் கணம் வரை... தீபாவளி ஸ்பெஷல் ஓடிடி வெளியீடுகள் இதோ
முதலில் இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. பின்னர் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர் நோ சொன்னதால், மாளவிகா மோகனனிடமும், பூ பார்வதியிடமும் படக்குழு பேச்சுவார்த்தை நடத்து வந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், இறுதியாக பூ பார்வதியை தான் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க தேர்வு செய்துள்ளாராம் பா.இரஞ்சித்.
கடந்த சில ஆண்டுகளாக தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்து வந்த பூ பார்வதிக்கு இது கம்பேக் படமாக அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி விக்ரமுக்கு ஜோடியாக அவர் நடிப்பது இதுவே முதன்முறை. இதுதவிர பா.ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை படத்தில் வாத்தியாராக நடித்து அசத்திய பசுபதியும் சியான் 61 படத்தில் முக்கிய ரோலில் நடிக்க கமிட் ஆகி உள்ளாராம்.
இதையும் படியுங்கள்... வாரிசு பட பாடல் தீபாவளிக்கு வருமா?... வராதா? - குழப்பத்தில் இருந்த ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன தமன்