Asianet News TamilAsianet News Tamil

அசீமுக்கு ஆப்பு வைக்க குறும்படம் போடச் சொல்லும் தனலட்சுமி... பொம்மை டாஸ்கால் பரபரக்கும் பிக்பாஸ் வீடு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பொதுமக்கள் என்கிற அடையாளத்துடன் கலந்துகொண்டுள்ள போட்டியாளரான தனலட்சுமி, குறும்படம் கேட்கும் புரோமோ வெளியாகி உள்ளது.

First Published Oct 26, 2022, 12:50 PM IST | Last Updated Oct 26, 2022, 12:50 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ‘நானும் பொம்மை... நீயும் பொம்மை’ என்கிற டாஸ்க் நடந்து வருகிறது. அதில் தனலட்சுமி சக போட்டியாளர்களான ஷெரினாவையும், நிவாஷினியையும் தள்ளிவிட்டதாக அசீம் குற்றம் சாட்டி இருந்ததோடு, நீயும் பொண்ணு தான் உனக்கெல்லாம் அறிவில்லையா என்று திட்டி இருந்தார்.

தற்போது வெளியாகி இருக்கும் புரோமோவில், தனலட்சுமி, அசீம் சொல்வது பொய் என்றும் இதற்காக குறும்படம் போடச் சொல்லி கமலிடம் கேட்கப்போவதாகவும், அப்படி அதில் தான் தவறு செய்தது தெரியவந்தால், தான் அனைவரது காலிலும் விழுந்து மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாகவும், ஒருவேளை நான் தவறு செய்யவில்லை என்றால் என்னை யாரெல்லாம் குற்றம் சாட்டினார்களோ, அவர்களெல்லாம் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறுகிறார்.

கடந்த வாரம் தான் ஆயிஷா உடன் சண்டை ஏற்பட்டு ரெட் கார்டு கொடுக்கும் அளவுக்கு பெயரைக் கெடுத்துக் கொண்ட அசீம். தற்போது தனலட்சுமியுடன் சண்டையிட்டு சர்ச்சையில் சிக்கி உள்ளார். இதையெல்லாம் பார்க்கும்போது இந்த வாரம் என்ன கார்டு கொடுக்கப்போகிறார்களோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது.

இதையும் படியுங்கள்... அடுத்தடுத்து வெளியாகும் வாரிசு பட ஸ்டில்ஸ்... ரசிகர்களை மெர்சலாக்கிய விஜய்யின் மாஸ் லுக் போட்டோஸ் இதோ

Video Top Stories