- Home
- Cinema
- அடுத்தடுத்து வெளியாகும் வாரிசு பட ஸ்டில்ஸ்... ரசிகர்களை மெர்சலாக்கிய விஜய்யின் மாஸ் லுக் போட்டோஸ் இதோ
அடுத்தடுத்து வெளியாகும் வாரிசு பட ஸ்டில்ஸ்... ரசிகர்களை மெர்சலாக்கிய விஜய்யின் மாஸ் லுக் போட்டோஸ் இதோ
தீபாவளிக்கு வாரிசு படத்தின் போஸ்டர், சர்ப்ரைஸாக வெளியிடப்பட்ட நிலையில், தற்போது அப்படத்தின் ஸ்டில்ஸ்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகின்றன.
வாரிசு படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பின்னணி பணிகள் படு ஜோராக நடைபெற்று வருகிறது. வாரிசு திரைப்படம் வருகிற 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வர உள்ளது. அஜித்தின் துணிவு படத்துக்கு போட்டியாக இப்படம் ரிலீசாக உள்ளது.
இதையும் படியுங்கள்... விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்த ‘கனெக்ட்’ ரிலீசுக்கு ரெடி... போஸ்டருடன் வந்த அப்டேட்
வாரிசு படம் ரிலீசுக்கு முன்பே பல கோடி வசூலை ஈட்டி வருகிறது. இவ்வாறு வாரிசு பட பிசினஸ் ஒருபுறம் சூடுபிடித்து வரும் வேளையில், ரசிகர்களுக்கு அடுத்தடுத்து அப்டேட் விட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறது படக்குழு. அதன்படி தீபாவளிக்கு இப்படத்தின் போஸ்டர், சர்ப்ரைஸாக வெளியிடப்பட்ட நிலையில், தற்போது அப்படத்தின் ஸ்டில்ஸ்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகின்றன.
அந்த ஸ்டில்ஸ்களை பார்த்து ரசிகர்கள் கேட்பதெல்லாம் ஒரே கேள்வி தான், விஜய்க்கு வயசு ஆகுமா? ஆகாதா? என்பது தான். 48 வயதிலும் செம்ம யங்காக காட்சியளிக்கும் விஜய்யின் புதிய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரல் ஆகி வருகின்றன. விஜய்யின் லேட்டஸ்ட் புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்து வருகின்றன.
