ரெட் ஜெயன்டுக்கு விஜய் நோ சொன்னதால்... அஜித்தின் துணிவு படத்தை தட்டித்தூக்கிய உதயநிதி - அப்போ வாரிசு யாருக்கு?
நடிகர் விஜய் தனது வாரிசு படத்தை ரெட் ஜெயண்ட்டுக்கு தர மறுத்துவிட்டதாகவும், அதனால் அஜித்தின் துணிவு படத்தை மட்டும் உதயநிதி வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் வருகிற ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாக உள்ளது. இதுகுறித்த அறிவிப்பு கடந்த ஜூன் மாதமே வெளியானது. இதனிடையே அஜித் நடித்துள்ள துணிவு படத்தையும் விஜய்யின் வாரிசு படத்துக்கு போட்டியாக வெளியிட அப்படக்குழு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகாவிட்டாலும், பொங்கல் வெளியீடு கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
இந்த இரண்டு படங்களில் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் எந்த படத்தின் உரிமையை கைப்பற்றப் போகிறது என்கிற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. அதன்படி அந்நிறுவனம் இரண்டு படங்களின் ரிலீஸ் உரிமையையும் கைப்பற்றும் முனைப்பில் இருந்துள்ளது. ஆனால் நடிகர் விஜய் தனது வாரிசு படத்தை ரெட் ஜெயண்ட்டுக்கு தர மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அஜித் நடித்துள்ள துணிவு படத்தின் ரிலீஸ் உரிமையை மட்டும் அந்நிறுவனம் கைப்பற்றி உள்ளதாம். நடிகர் விஜய், வாரிசு படத்தை ரெட் ஜெயண்ட்டுக்கு கொடுக்காததற்கு முக்கிய காரணம் ஒன்றும் கூறப்படுகிறது. அது என்னவென்றால், விஜய் நடிப்பில் இதற்கு முன் வெளியான பீஸ்ட் படத்தின் ரிலீஸ் உரிமையை உதயநிதி தான் கைப்பற்றி இருந்தார்.
இதையும் படியுங்கள்... ரஜினி, விஜய்-லாம் இல்லைங்க... தோனி தயாரிக்கும் முதல் தமிழ் படத்தில் ஹீரோவாக நடிக்கும் பிக்பாஸ் பிரபலம்..!
அதேபோல் அப்படத்துக்கு போட்டியாக வெளிவந்த கே.ஜி.எஃப் 2 படத்தின் உரிமையை எஸ்.ஆர்.பிரபு கைப்பற்றி இருந்தாலும், குறிப்பிட்ட சில பகுதிகளில் அப்படத்தை ரெட் ஜெயண்ட் தான் வெளியிட்டதாம். பீஸ்ட் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாததால், கே.ஜி.எஃப் 2 பட உரிமை தங்கள் கைவசம் இருந்த பகுதிகளில் பீஸ்ட் படத்தை தூக்கிவிட்டு கே.ஜி.எஃப் 2 படத்தை போட்டுவிட்டார்களாம். இதனால் பீஸ்ட் பட வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு தான் தற்போது வாரிசு பட உரிமையை ரெட் ஜெயண்ட்டுக்கு விஜய் தர மறுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்காரணமாக வாரிசு படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை விஜய்யின் மாஸ்டர் படத்தை தயாரித்த செவன் ஸ்கிரீன் லலீத் குமார் தான் கைப்பற்றி இருக்கிறாராம். இதனால் பொங்கலுக்கு தியேட்டர்களை கைப்பற்ற இரு படங்களுக்கும் இடையே கடும் போட்டியே நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... துபாயில் ரகசியமாக நடந்த திருமணம்... தொழிலதிபரை மணந்தார் நடிகை பூர்ணா - வைரலாகும் போட்டோஸ்