ரஜினி, விஜய்-லாம் இல்லைங்க... தோனி தயாரிக்கும் முதல் தமிழ் படத்தில் ஹீரோவாக நடிக்கும் பிக்பாஸ் பிரபலம்..!
தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தமிழில் தயாரிக்க உள்ள முதல் படத்தில் நடிக்க உள்ள நடிகர், நடிகை குறித்த தகவல் கசிந்துள்ளது.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி, தற்போது பட தயாரிப்பிலும் இறங்கி உள்ளார். இதற்காக தோனி எண்டர்டெயின்மெண்ட் என்கிற நிறுவனத்தை தொடங்கி அதன்மூலம் படங்களை தயாரிக்கும் பணியில் மும்முரமாக இறங்கி இருக்கிறார். ஏற்கனவே சில விழிப்புணர்வு குறும்படம் மற்றும் அதர்வா தி ஆரிஜின் என்கிற கிராபிக்ஸ் நாவலை தயாரித்துள்ள இந்நிறுவனம் தற்போது பட தயாரிப்பில் இறங்கி உள்ளது.
தோனி தனது முதல் படத்தை தமிழில் தான் தயாரிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளார். ஏற்கனவே இதுகுறித்த தகவல்கள் வெளியானதோடு, அந்த படத்தில் நடிக்க ரஜினி, விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. ஆனால் அவையெல்லாம் வதந்தி என்பது தற்போது உறுதியாகி உள்ளது.
இதையும் படியுங்கள்... துபாயில் ரகசியமாக நடந்த திருமணம்... தொழிலதிபரை மணந்தார் நடிகை பூர்ணா - வைரலாகும் போட்டோஸ்
ரமேஷ் தமிழ்மணி
அதன்படி தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தமிழில் தயாரிக்க உள்ள முதல் படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்க உள்ளதாகவும், இப்படத்திற்கு தோனியின் மனைவி சாக்ஷி தான் கதை எழுதி உள்ளதாக நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால் அந்த அறிவிப்பில் இப்படத்தில் நடிக்கும் ஹீரோ, ஹீரோயின் குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
பிரியங்கா மோகன், ஹரீஷ் கல்யாண்
இந்நிலையில், தற்போது தோனி தயாரிக்கும் முதல் தமிழ் படத்தில் நடிக்க உள்ள நடிகர், நடிகை குறித்த தகவல் கசிந்துள்ளது. அதன்படி அப்படத்தில் நடிகரும், பிக்பாஸ் பிரபலமுமான ஹரீஷ் கல்யாண் தான் ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க நடிகை பிரியங்கா மோகனிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... சர்தார் படத்தின் இரண்டாம் பாகம் உறுதி..! அதிகார பூர்வமாக அறிவித்த நடிகர் கார்த்தி..!