MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சர்தார் படத்தின் இரண்டாம் பாகம் உறுதி..! அதிகார பூர்வமாக அறிவித்த நடிகர் கார்த்தி..!

சர்தார் படத்தின் இரண்டாம் பாகம் உறுதி..! அதிகார பூர்வமாக அறிவித்த நடிகர் கார்த்தி..!

நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான மூன்று படங்களுமே, அடுத்தடுத்து வெற்றி பெற்றதை தொடர்ந்து, தற்போது சர்தார் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என அதிகார பூர்வ தகவலை வெளியிட்டுள்ளார். 

2 Min read
Author : manimegalai a
Published : Oct 25 2022, 10:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்திக்கு இந்த வருடம் மிகவும் ராசியான வருடம் என்று தான் கூற வேண்டும், இவர் நடிப்பில் அடுத்தடுத்து வெளியான விருமன், பொன்னியின் செல்வன் மற்றும் தீபாவளி ரிலீசாக வெளியான ‘சர்தார்’ ஆகிய படங்கள் பிரமாண்ட வெற்றி பெற்றது மட்டும் இன்றி, திரையரங்கில் நின்று வசூல் வேட்டை செய்தது. சர்தாரின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக, சர்தார் பட வெற்றிவிழா சந்திப்பில் நடிகர் கார்த்தி அறிவித்தார். 
 

24

இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியான விருமன் படத்தில் கரடுமுரடான தோற்றத்தில் கிராமத்து மனிதனாக மிரட்டியிருந்தார் கார்த்தி. அதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவின் நீண்ட வருட கனவு திரைப்படமாக, இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்தில் முதன்மை பாத்திரமான வந்தியதேவன் பாத்திரத்தில், ஒன்றி நடித்து மக்களின் மனம் கவர்ந்தார். 

மேலும் செய்திகள்: தேவலோக ரம்பை போல் மாறிய குட்டி நயன் அனிகா..! கண்ணாடி முன் அமர்ந்து... அழகை வெளிப்படுத்திய அசத்தல் போட்டோஸ்!
 

34

இதைத்தொடர்ந்து தீபாவளி கொண்டாட்டமாக வெளியான 'சர்தார்' படத்தில் தந்தை, மகன் என இரட்டை வேடத்தில் உளவாளி கதாப்பாத்திரத்தில் நடித்து அனைவரது நெஞ்சங்களையும் கொள்ளை கொண்டுள்ளார். மாறுபட்ட கதைக்களம், விதவிதமான கதாப்பாத்திரம்  என ஒவ்வொரு படத்திலும் அசத்தி வருகிறார் கார்த்தி. கார்த்தி படம் என்றால் நம்பி தியேட்டர் போகலாம் எனும் கருத்தை மக்கள் மனதில் அழுத்தமாக பதித்து, தனக்கென தனியொரு இடத்தை பிடித்துள்ளார். 
 

44

தீபாவளிக்கு வெளியான 'சர்தார்' படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் உருவாகவுள்ளதாக அறிவித்துள்ளார் கார்த்தி. அதிகாரப்பூர்வமாக வெளியான அறிவிப்பையடுத்து ரசிகர்கள் இச்செய்தியினை கொண்டாடி வருகின்றனர். 'சர்தார்' பட வெற்றி விழாவில், தயாரிப்பாளர் பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லக்‌ஷ்மன்,  டைரக்டர் பி.எஸ்.மித்ரன்,  ரெட் ஜயண்ட் செண்பக மூர்த்தி,  இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி.வில்லியம்ஸ்,  எடிட்டர் ரூபன்,  கலை இயக்குநர் கதிர், ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன், வசனகர்த்தா பொன் பார்த்திபன், சிறப்பு ஒப்பனையாளர் பட்டணம் ரஷீத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்: இயக்குனர் பேரரசுக்கு 'கைலாச தர்ம ரட்சகா விருது' கொடுத்த நித்தியானந்தா! ஏன் தெரியுமா?
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
விஜியை குறிவைக்கும் சுந்தரபாண்டியன் - லாவண்யா கூட்டணி! நடுவில் சிக்கித் தவிக்கும் விஜி - செல்லமே செல்லமே அதிரடி!
Recommended image2
அன்பு வீட்டுக்கு போகும் ஆனந்தி! அன்னபூரணியின் மாஸ்டர் பிளான் - சிங்கப் பெண்ணே சீரியலில் செம டுவிஸ்ட்!
Recommended image3
திருமணத்தை மீறிய உறவை தட்டிக்கேட்டதால் தண்டனை அனுபவிக்கிறேன் : மன வேதனையுடன் விவாகரத்து கோரிய சங்கீதா விஜய்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved