தேவலோக ரம்பை போல் மாறிய குட்டி நயன் அனிகா..! கண்ணாடி முன் அமர்ந்து... அழகை வெளிப்படுத்திய அசத்தல் போட்டோஸ்!
அனிகா சுரேந்திரன் வெள்ளை நிற உடையில்... தேவ லோக ரம்பை போல் மின்னும் அழகில் ஜொலிக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
அனிகாவை பார்ப்பதற்கு இவரா? இப்படி மளமளவென வளர்ந்து ஹீரோயின் லுக்கில் ஜொலிக்கிறார் என அனைவரையுமே ஆச்சர்யப்படுத்தி வருகிறார். 17 வயதை எட்டியதுமே... ஹீரோயின் ஆசை தொற்றிக்கொண்டதால் என்னவே, அடிக்கடி கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது வெள்ளை நிற லெஹன்கா உடையில், அழகை வெளிப்படுத்திய புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா, அங்கு பல படங்களில் நடித்தாலும் பெயரையும், புகழையும் இவருக்கு பெற்று தந்தது என்றால் அது... அனிகா அஜித்துக்கு மகளாக நடித்த 'என்னை அறிந்தால்' திரைப்படம். இந்த படத்தில் த்ரிஷாவுக்கு மகளாக நடித்த அனிகா, மீண்டும் சிவத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்த 'விஸ்வாசம்' படத்தில் அஜித் - நயன்தாராவுக்கு மகளாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
மேலும் செய்திகள்: மனைவி ஷாலினியுடன்.. துணிவு பட லுக்கில் அஜித் கொண்டாடிய தீபாவளி! வைரலாகும் போட்டோஸ்!
இந்த படத்திற்கு பின்னர் இவரை, ரசிகர்கள் பலரும் நயன்தாராவின் மினிமேச்சர் என அழைக்க துவங்கி விட்டனர். அனிகாவும் சமீப காலமாக நயன்தாராவுக்கே டஃப் கொடுக்கும் விதமான சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது, அனிகா வெள்ளை நிற உடையில் தேவ லோக ரம்பை போல் கண்ணாடி முன் நின்றபடி, அமர்ந்தபடி விதவிதமாக போஸ் கொடுத்து அசத்தியுள்ளார்.
தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகியுள்ள இந்த புகைப்படம் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருவதோடு, லைக்குகளை குவித்து வருகிறது. மேலும் அனிகா முன்பை விட அழகில் மெருகேறி விட்டதாக நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.
மேலும் செய்திகள்: தீபாவளி ஸ்பெஷல்... கைகளை குத்த வைத்து குளுகுளு கவர்ச்சி காட்டிய பூஜா ஹெக்டே..! ஸ்டன்னிங் ஹாட் போட்டோஸ்!
குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் போதே... கண்ணை கட்டும் அழகில் புகைப்படம் வெளியிட்ட அனிகா, ஹீரோயினாக அவதாரம் எடுத்து விட்டால், சொல்லவா வேண்டும்... நாளுக்கு நாள் கவர்ச்சியையும் கூட்டி வருகிறார் அனிகா.
இவர் தெலுங்கில் ஹீரோயினாக நடித்துள்ள திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த படம் வெளியான பின்னர்... தொடர்ந்து தமிழ், மலையாளம், ஆகிய மொழிகளிலும் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகள்: வேஷ்டி..சட்டையில் கலக்கும் கமல்ஹாசன்..மாஸ் காட்டும் உலகநாயகன்