Asianet News TamilAsianet News Tamil

பொம்மை டாஸ்க்கால் போர்க்களமான பிக்பாஸ் வீடு... அடித்துக்கொள்ளும் ஹவுஸ்மேட்ஸ் - அனல்பறக்கும் புரோமோ இதோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பொம்மை டாஸ்க்கால் ஹவுஸ்மேட்ஸ் இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது.

First Published Oct 26, 2022, 10:07 AM IST | Last Updated Oct 26, 2022, 10:09 AM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் தற்போது இரண்டு வாரங்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் இருந்து முதல் ஆளாக சாந்தி எலிமினேட் ஆகி கடந்த ஞாயிறன்று வெளியேறினார். அதேபோல் ஜிபி முத்துவும் விலகிவிட்டதால், தற்போது 19 போட்டியாளர்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

போட்டியாளர்களுக்கு வார வாரம் டாஸ்க் கொடுக்கப்படும். அந்த வகையில் இந்த வாரம் ‘நானும் பொம்மை.. நீயும் பொம்மை’ என்கிற டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொள்கின்றனர். நேற்று மகேஸ்வரி - தனலட்சுமி இடையே சண்டை ஏற்பட்ட நிலையில், இன்று அசீம், தனலட்சுமியை திட்டும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ள புரோமோவில் இடம்பெற்று உள்ளது.

அதன்படி போட்டியாளர்களான ஷெரினா மற்றும் நிவாஷினி ஆகியோரை தனலட்சுமி தள்ளிவிட்டதாக குற்றம்சாட்டும் அசீம், அவரை ‘நீயும் ஒரு பெண் தானே, உனக்கு அறிவில்லையா’ என திட்டி பேசிய வீடியோ அந்த புரோமோவில் இடம்பெற்று உள்ளது. இதனால் இன்றைய நிகழ்ச்சியும் அனல்பறக்கும் என்பது உறுதியாக தெரிகிறது.

இதையும் படியுங்கள்... ரெட் ஜெயன்டுக்கு விஜய் நோ சொன்னதால்... அஜித்தின் துணிவு படத்தை தட்டித்தூக்கிய உதயநிதி - அப்போ வாரிசு யாருக்கு?

Video Top Stories