Asianet News TamilAsianet News Tamil

அய்யய்யோ இந்த டாஸ்க்கா... அப்போ இந்த வாரம் பிக்பாஸ் வீடே கண்ணீர் கடல்ல மிதக்கப்போகுது..! புரோமோ இதோ

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் ஆரம்பமாகி ஒரு வாரம் முடிந்துள்ள நிலையில், இந்த வாரத்துக்கான டாஸ்க் குறித்து புரோமோ வெளியாகி உள்ளது.

First Published Oct 18, 2022, 11:33 AM IST | Last Updated Oct 18, 2022, 11:33 AM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் வெற்றிகரமாக இரண்டாவது வாரம் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் விதிப்படி வாரம் ஒரு டாஸ்க் நடத்தப்படும். அந்த வகையில் இந்த வாரத்திற்கான டாஸ்க் குறித்த புரோமோ வெளியாகி உள்ளது. கதை சொல்லும் நேரம் என பெயரிடப்பட்டுள்ள இந்த டாஸ்கில், போட்டியாளர்கள் ஒவ்வொருவராக கதை சொல்ல வேண்டும். 

அவர்கள் சொல்லும் கதை பிற ஹவுஸ்மேட்ஸை கவர வேண்டும். அதுமட்டுமின்றி கதையை முழுவதுமாக சொல்லி முடிப்பவர்கள் இந்த வார நாமினேஷனில் இருந்து தப்பித்து விடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதலில் கதை சொல்ல செல்லும் அசீம், தனது சொந்த வாழ்க்கை பற்றியும், தனது மனைவியை விவாகரத்து செய்து பிரிந்தது பற்றியும் பேசுகிறார்.

அவர் ஒருபுறம் எமோஷனலாக பேசிக் கொண்டிருக்க, அது தங்களுக்கு பிடிக்கவில்லை என நடிகைகள் ரச்சிதா, மகேஸ்வரி, சாந்தி ஆகியோர் அடுத்தடுத்து வந்து பஸ்ஸரை அமுக்கி அவரை எலிமினேஷனில் இருந்து தப்ப விடாமல் செய்கின்றனர். பின்னர் இதை நினைத்து கண்ணீர் விட்டு அசீம் அழும் காட்சிகளும் புரோமோவில் இடம்பெற்று உள்ளன.

இதற்கு முந்தைய சீசன்களில் இந்த டாஸ்க் நடக்கும் போது வீடே கண்ணீர் கடலில் மிதக்கும். அதேபோல் இந்த சீசனிலும் இந்த வாரம் முழுக்க இந்த டாஸ்க் நடைபெற இருப்பதால், என்னென்ன கூத்தெல்லாம் நடக்கப்போகுதோ என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி போட்டியாளர்களின் ஒரு நாள் மட்டும் சம்பளம் இவ்வளவா..! அதிகம் வாங்குவது யார் தெரியுமா

Video Top Stories