பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி போட்டியாளர்களின் ஒரு நாள் மட்டும் சம்பளம் இவ்வளவா..! அதிகம் வாங்குவது யார் தெரியுமா
பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி துவங்கப்பட்டு நேற்றுடன் ஒரு வாரம் முடிவடைந்துள்ள நிலையில், நேற்றைய தினம் மைனா நந்தினி வயல் கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்தார். அனல் பறக்க போட்டி விறுவிறுப்படைந்துள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி வரும் 21 போட்டியாளர்களின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஆடிஷன் மூலம் தேர்வாகி, பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ள டிக் டாக் மூலம் பிரபலமான தனலட்சுமி ஒரு நாளைக்கு 11 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது.
அதே போல் ஒரு மாடலாகவும், காஸ்டியூம் டிசைனராகவும் அறியப்பட்டு... வெளிநாட்டில் இருந்து வந்து பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள நிவா... ஒரு நாளைக்கு 12 ஆயிரம் முதல் 18 ஆயிரம் வரை சம்பளமாக பெருகிறாராம்.
'அன்பே வா' சீரியலில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள குயின்சி, ஒரு நாளைக்கு 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை சம்பளமாக வாங்குகிறாராம்.
மேலும் செய்திகள்: 'தீ இவன்' படத்தில் நவசர நாயகன் கார்த்திக்குடன் குத்தாட்டம் போடும் சன்னி லியோன்..!
அதே போல் சின்னத்திரையில் விஜே வாக அறியப்பட்டு, வெள்ளித்திரையில் கதாநாயகனாக மின்ன வேண்டும் என்கிற கனவுடன் பிக்பாஸ் வீட்டில் அடியெடுத்து வைத்துள்ள விஜே கதிரவன் ஒரு நாளைக்கு 18000 முதல் 22,000 வரை சம்பளமாக பெருகிறாராம்.
பிரபல விஜே-வும், நடிகையுமான மகேஸ்வரி... வெள்ளித்திரையில் ஒரு சில படங்கள் நடித்துள்ள போதிலும், வலுவான இடத்தை பிடிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் தற்போது பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ளதாக கூறப்படுகிறது. இவருக்கு ஒரு நாளைக்கு 18000 முதல் 23 ஆயிரம் வரை சம்பளமாக கொடுக்கப்படுகிறதாம்.
ஸ்டண்ட் அப் காமெடியனாக ஜெயித்த அமுத வாணனுக்கு, ஏனோ... ரோபோ ஷங்கர், புகழ் போன்று நிலையான இடத்தை பிடிக்க முடியவில்லை... பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கான ஒரு இடம் கிடைக்கும் என்பர் நம்பிக்கையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். இவர் ஒரு நாளைக்கு மட்டும் 23 ஆயிரம் முதல் 27 ஆயிரம் வரை சம்பளமாக பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின், மாநில செய்தி தொடர்பாளராக விக்ரமன் ஒரு நாளைக்கு 15,000 முதல் 17,000 வரை சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்: நேத்து டூப் போட்டு ஏமாத்திட்டாங்க... ஆனா இன்னைக்கு...! அஜித்தின் மாஸ் எண்ட்ரியால் அதிர்ந்த சென்னை ஏர்போர்ட்
லாஸ்லியாவை தொடர்ந்து, இலங்கையின் வரவாக வந்துள்ள நிகழ்ச்சி தொகுப்பாளினி ஜனனி ஒரு நாளைக்கு 21 ஆயிரம் முதல் 26 ஆயிரம் வரை சம்பளமாக பெருகிறாராம்.
லாஸ்லியாவை தொடர்ந்து, இலங்கையின் வரவாக வந்துள்ள நிகழ்ச்சி தொகுப்பாளினி ஜனனி ஒரு நாளைக்கு 21 ஆயிரம் முதல் 26 ஆயிரம் வரை சம்பளமாக பெருகிறாராம்.
மேலும் செய்திகள்: திருமண கோலத்தில் கழுத்தில் தாலியோடு குத்தாட்டம் போடும் கீர்த்தி சுரேஷ்! வைரலாகும் படக்குழு வெளியிட்ட போஸ்டர்!
இலங்கையை சேர்ந்த பாப் பாடகரான ADK ஒரு நாளைக்கு மட்டும் 16 ஆயிரம் முதல் 19 ஆயிரம் வரை சம்பளமாக பெருகிறாராம்.
கிரிக்கெட் விளையாட்டு வீரரும், மாடலுமான ராம் ராமசாமி... பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் வெள்ளித்திரை வாய்ப்பை கைப்பற்ற வேண்டும் என்கிற எண்ணத்தில் நுழைந்துள்ளார் இவர் ஒரு நாளைக்கு 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்: myna nandhini : கணவருக்கு முத்தமிட்டபடி சூப்பர் கூல் லுக்கில் மைனா நந்தினி...
சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற சூப்பர் ஹிட் சீரியலில் நடித்து பிரபலமான ரக்ஷிதா மஹாலக்ஷ்மி ஒரு நாளைக்கு 25 ஆயிரம் முதல் 28 ஆயிரம் வரை சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது.
பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரும், சீரியல் நடிகருமான மணிகண்டன் ராஜேஷ்... தன்னுடைய அடையாளத்தை மாற்ற வேண்டும் என்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இவருக்கு ஒரு நாளைக்கு 18 ஆயிரம் முதல் 24 ஆயிரம் வரை சம்பளமாக கொடுக்கப்படுகிறதாம்.
பிரபல மாடலான செரினா, தன்னுடைய ஹீரோயின் கனவு மெய்ப்பட வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இவருக்கு ஒரு நாளைக்கு 23 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை சம்பளமாக கொடுக்க படுவதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்: Hansika Motwani : ஓவியம் வரைந்த.. கிளாமர் உடையில் ரசிகர்களை கவர்ந்த..ஹன்சிகா மோத்வானி
https://tamil.asianetnews.com/gallery/cinema/hansika-motwani-latest-new-look-photos-rjuulr
சத்யா சீரியல் மற்றும் பல்வேறு ஆல்பம் பாடல்கள் மூலம் பிரபலமானவர் நடிகை ஆயிஷா. இவருக்கு ஒரு நாளைக்கு 28 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை சம்பளமாக கொடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத நபராக அறியப்படுபவர் நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர். இவருக்கு ஒரு நாளைக்கு 25 ஆயிரம் முதல் 27 ஆயிரம் வரை சம்பளமாக பெருகிறாராம்.
பிரபல சீரியல் நடிகரான அஸீமிக்கு ஒரு நாளைக்கு மட்டும் 22,000 முதல் 25 ஆயிரம் வரை சம்பளமாக கொடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகள்: படுக்கையில் இருந்தபடி...பார்ப்பவர்களை பக்கென்றாக்கும் ஆண்ட்ரியா...
ஆடிஷன் மூலம் தேர்வு செய்ய போட்டியாளர்களின் ஒருவர் தான் ட்ரான்ஸ் மாடலான ஷிவின் கணேசன்... இவருக்கு ஒரு நாளைக்கு மட்டும் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை சம்பளமாக வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
மிக சிறிய வயதிலேயே பிக்பாஸ் நிகழ்ச்சியை கலந்து கொள்ளும் அளவுக்கு தன்னுடைய திறமையால் உயர்ந்துள்ள பாப் பாடகரான அசல் கோளாறுக்கு ஒரு நாளைக்கு 15,000 முதல் 17,000 வரை சம்பளமாக வழங்க படுகிறதாம்.
மேலும் செய்திகள்: Sameera Reddy : பாத் டப்பில் நுரையுடன் சமீரா ரெட்டி...பழைய ஃபாமுக்கு திரும்பிட்டாரே!
டிக் டாக் மூலம் பிரபலமாகி... தாறுமாறான விமர்சனங்களுக்கு பின்னர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்து, எதார்த்தமாக கன்டென்ட் கொடுத்து வரும் ஜி பி முத்து முத்து ஒரு நாளைக்கு 15,000 முதல் 18000 வரை சம்பளமாக பெருகிறாராம்.
கடைசியாக கலந்து கொண்டுள்ள மைனா நந்தினி... இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை சம்பளமாக பெருகிறாராம்.
மேலும் செய்திகள்: கன்னடத்தை தொடர்ந்து தமிழிலும் மாஸ் காட்டும் காந்தாரா... இயக்குனரை கட்டிப்பிடித்து பாராட்டிய கார்த்தி
அதே போல் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக... நடிகர் கமல்ஹாசனுக்கு மொத்தமாக 75 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளதாம். மேலும் போட்டியாளர்களின் அதிகபட்சமாக ரஷிதா மஹாலக்ஷ்மி மற்றும் ஆயிஷா ஆகியோர் தான் வாங்குவதாக தெரிகிறது. தற்போது போட்டியாளர்களின் சம்பளம் குறித்து வெளியாகியுள்ள தகவல் யுகத்தின் அடிப்படியில் மட்டுமே வெளியாகியுள்ளது. இது அதிகார பூர்வ தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.