நேத்து டூப் போட்டு ஏமாத்திட்டாங்க... ஆனா இன்னைக்கு...! அஜித்தின் மாஸ் எண்ட்ரியால் அதிர்ந்த சென்னை ஏர்போர்ட்
துணிவு பட ஷூட்டிங்கிற்காக தாய்லாந்து சென்றிருந்த நடிகர் அஜித், இன்று அதிகாலை சென்னை திரும்பியபோது விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் தாய்லாந்தில் நடைபெற்றது. இதற்காக கடந்த மாதம் தாய்லாந்து சென்ற நடிகர் அஜித், அங்கு ஷூட்டிங்கை முடித்துவிட்டு சில நாட்கள் பைக் ரைடிங்கிலும் ஈடுபட்டார். அஜித்தின் உலக சுற்றுலா பயணத்தின் ஒரு பகுதியாக இந்த தாய்லாந்து பைக் ட்ரிப் அமைந்தது.
இதனிடையே நேற்று சென்னை அண்ணாசாலையில் உள்ள எல்.ஐ.சி கட்டிடம் முன் அஜித்தின் துணிவு பட ஷூட்டிங் நடைபெற்றது. அப்போது தீயணைப்பு வாகனம் மீது இருவர் முகமுடி அணிந்து அமர்ந்திருந்தனர். அதில் ஒருவர் தலையில் நரைமுடி இருந்ததை பார்த்த உடன் அது அஜித் தான் என நினைத்து ரசிகர்கள் அங்கு கூடினர்.
இதையும் படியுங்கள்... அரண்மனையில் ஆடம்பரமாக நடக்க உள்ள ஹன்சிகாவின் திருமணம்... தடபுடலாக நடக்கும் ஏற்பாடு..! மாப்ள யார் தெரியுமா?
ஆனால் அது அஜித் இல்லை, அவரைப்போல் தோற்றம் கொண்ட டூப்பை பயன்படுத்தி எச்.வினோத் காட்சிகளை எடுத்தது தெரியவந்தது. இதனால் அஜித்தை பார்க்க ஆவலோடு அங்கு காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால் இன்று அதிகாலை தாய்லாந்தில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தார் அஜித்.
அஜித் வருவதை அறிந்த ரசிகர்கள் அதிகாலையிலேயே சென்னை விமான நிலையத்தின் முன் குவிந்தனர். அப்போது அவர் ஏர்போர்ட்டில் இருந்து வெளியே வந்ததும் ரசிகர்கள் விசிலடித்து ஆரவாரம் செய்ததால் ஏர்போர்ட்டே அதிர்ந்து போனது என்று தான் சொல்ல வேண்டும். அதுகுறித்த வீடியோவும் சோசியல் மீடியாவில் வெளியாகி செம்ம வைரல் ஆகி வருகிறது.
இதையும் படியுங்கள்... Happy Birthday Keerthy Suresh : குழந்தை நட்சத்திரம் டு தேசிய விருது நாயகி...கீர்த்தி குறித்த சில தகவல்