அரண்மனையில் ஆடம்பரமாக நடக்க உள்ள ஹன்சிகாவின் திருமணம்... தடபுடலாக நடக்கும் ஏற்பாடு..! மாப்ள யார் தெரியுமா?
நடிகை ஹன்சிகாவின் திருமணத்திற்காக ஜெய்ப்பூரில் உள்ள பழங்காலத்து அரண்மனையை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
சினிமாவில் அறிமுகமான உடனே முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைப்பது எல்லாம் ஒரு சில நடிகைகளுக்கு மட்டுமே நடக்கும். அப்படி சினிமாவில் எண்ட்ரி கொடுத்த சில வருடங்களிலேயே விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து கோலிவுட்டின் கனவு தேவதையாக வலம் வந்தவர் ஹன்சிகா.
அறிமுகமான புதிதில் கொழுகொழுவென இருந்த ஹன்சிகா, தற்போது உடல் எடையை குறைத்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிவிட்டார். முன்பைப் போல் முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகள் கிடைக்காததால் பெரும்பாலும் புதுமுக நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் ஹன்சிகா.
சினிமாவில் காதல் சர்ச்சையிலும் சிக்கி உள்ளார் ஹன்சிகா. வாலு படத்தில் நடித்தபோது சிம்புவுக்கும் ஹன்சிகாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின்னர் சில நாட்களிலேயே இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதை அடுத்து இருவரும் பிரேக் அப் செய்து பிரிந்துவிட்டனர். இருப்பினும் இருவரும் தற்போது நண்பர்களாக இருந்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... முதல் வாரமே இத்தனை பேர் நாமினேஷனில் சிக்கினார்களா... என்ன லிஸ்ட் ரொம்ப பெருசா போகுது..! பிக்பாஸ் புரோமோ இதோ
இந்நிலையில் நடிகை ஹன்சிகாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் பரவி வருகிறது. வருகிற டிசம்பர் மாதம் ஹன்சிகாவுக்கு திருமணம் நடக்க இருக்கிறதாம். அதற்கான ஏற்பாடுகளை அவரது குடும்பத்தினர் தற்போது தடபுடலாக செய்து வருகிறார்களாம். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் தான் ஹன்சிகாவின் திருமணம் நடக்க உள்ளதாம்.
இதற்காக ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரண்மனையை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஹன்சிகாவை திருமணம் செய்துகொள்ளப்போகும் மாப்பிள்ளை தொழிலதிபர் என்றும் அவர் திரைத்துறையை சேர்ந்தவர் இல்லை என்பதும் உறுதியாகி உள்ளது. இருப்பினும் அவர்களது திருமண தேதி இன்னும் வெளியாகவில்லை.
இதையும் படியுங்கள்... தமிழகத்தில் மட்டும் ரூ.200 கோடி வசூல்... விக்ரம் படத்தின் ஆல்டைம் ரெக்கார்டை அடிச்சுதூக்கிய பொன்னியின் செல்வன்