Asianet News TamilAsianet News Tamil

முதல் வாரமே இத்தனை பேர் நாமினேஷனில் சிக்கினார்களா... என்ன லிஸ்ட் ரொம்ப பெருசா போகுது..! பிக்பாஸ் புரோமோ இதோ

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் முதல் நாமினேஷன் இன்று நடைபெற்றுள்ளது. இதற்கான புரோமோ வீடியோவும் வெளியாகி உள்ளது.

First Published Oct 17, 2022, 9:54 AM IST | Last Updated Oct 17, 2022, 10:01 AM IST

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் தற்போது 21 போட்டியாளர்கள் உள்ளனர். முதல் வாரம் எலிமினேஷன் இல்லாததால், நாமினேஷனும் நடக்கவில்லை. இருப்பினும் கடந்த வாரம் நடைபெற்ற டாஸ்க்கின் அடிப்படையில், அசீம், ராம், மகேஸ்வரி மற்றும் தனலட்சுமி ஆகியோர் நேரடியாக இந்த வார எவிக்‌ஷன் பட்டியலில் இடம்பெற்றனர்.

இதர போட்டியாளர்களுக்கான நாமினேஷன் புராசஸ் குறித்த புரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அதில் முதல் ஆயிஷா தான் விக்ரமன் மற்றும் ஷிவினை நாமினேட் செய்வதாக கூறுகிறார். இதையடுத்து ராபர்ட் மாஸ்டர் ஆயிஷாவை நாமினேட் செய்கிறார். அவர் எதுக்கெடுத்தாலும் கத்தி கத்தியே சாதிச்சிடுறாங்க என கூறுகிறார்.

அடுத்ததாக சாந்தியை நாமினேட் செய்யும் ஏடிகே, அவர் டாமினேட் செய்வதாக சொல்கிறார். பின்னர் வரும் ஜிபி முத்து, குவின்ஸியை நாமினேட் செய்து, அவர் குறிப்பிட்ட ஆட்களிடம் மட்டுமே பழகுவதாக கூறினார். அதேபோல் குவின்ஸி, ரச்சிதாவை தேர்வு செய்து அவர் இன்னும் அவரது இன்னொரு முகத்தை காட்டவில்லையோ என தோணுவதாக கூறி நாமினேட் செய்துள்ளார்.

இதைப்பார்க்கும் போது ஒவ்வொருவரும் வெவ்வேறு பெயர்களைக் கூறி உள்ளதால், இந்த வார நாமினேஷன் பட்டியலில் அனைத்து போட்டியாளர்களும் இடம்பெற்றுவிடுவார்கள் போல தெரிகிறது.

இதையும் படியுங்கள்... குவின்ஸியிடம் சில்மிஷம் செய்த அசல் கோளார்... வீடியோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - ஆக்‌ஷன் எடுப்பாரா பிக்பாஸ்?

Video Top Stories