தமிழகத்தில் மட்டும் ரூ.200 கோடி வசூல்... விக்ரம் படத்தின் ஆல்டைம் ரெக்கார்டை அடிச்சுதூக்கிய பொன்னியின் செல்வன்
தமிழகத்தில் அதிக வசூல் ஈட்டிய படங்கள் பட்டியலில் விக்ரம் படத்தை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம்.
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த மாதம் 30-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசானது. விக்ரம், திரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், ஜெயராம், விக்ரம் பிரபு, சரத்குமார், பிரபு, பார்த்திபன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படம் ரிலீசானது முதல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
லைகா நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்த இப்படம் வசூலில் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் விக்ரம் படத்தின் லைஃப் டைம் வசூலை 426 கோடியை தாண்டி சாதனை படைத்த இப்படம், தற்போது தமிழகத்தில் மட்டும் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்துள்ளது.
இதையும் படியுங்கள்... குவின்ஸியிடம் சில்மிஷம் செய்த அசல் கோளார்... வீடியோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - ஆக்ஷன் எடுப்பாரா பிக்பாஸ்?
இதன்மூலம் தமிழகத்தில் அதிக வசூல் ஈட்டிய படங்கள் பட்டியலில் விக்ரம் படத்தை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது பொன்னியின் செல்வன். இதன்மூலம் விக்ரம் படத்தின் ஆல்டைம் ரெக்கார்டை தகர்த்துள்ளது பொன்னியின் செல்வன். இதுவரை தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த படங்கள் பட்டியலில் பொன்னியின் செல்வன் முதலிடத்திலும், விக்ரம் இரண்டாவது இடத்திலும் உள்ளன. பாகுபலி 2, விஸ்வாசம், பிகில் ஆகிய படங்கள் முறையே அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
அதுமட்டுமின்றி அமெரிக்காவில் மட்டும் இப்படம் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது. தற்போது வரை பொன்னியின் செல்வன் திரைப்படம் மொத்தமாக ரூ.461 கோடி வசூல் ஈட்டி உலகளவில் அதிக வசூல் ஈட்டிய தமிழ் படங்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் ரஜினியின் 2.0 திரைப்படம் முதலிடம் பிடித்துள்ளது. அப்படம் உலகளவில் ரூ.650 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... நெருங்கி பழகினோம்.. அடிச்சு டார்ச்சர் செய்தான் - அர்னவ் மீது திருநங்கை கொடுத்த அடுக்கடுக்கான புகாரால் பரபரப்பு