Sameera Reddy : பாத் டப்பில் நுரையுடன் சமீரா ரெட்டி...பழைய ஃபாமுக்கு திரும்பிட்டாரே!

இந்நிலையில் தற்போது பாத் டப்பில் நுரையுடன் இருக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார். அவருடன் டீமும் இடம்பெற்றுள்ளது.

Sameera Reddy latest new videos

பாலிவுட் நடிகையான சமீரா ரெட்டி வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான விருதுகளையும் பெற்று விட்டார். சூர்யாவின் முன்னாள் காதலியாக வந்து ரசிகர்களை கவர்ந்திருந்தார் சமீரா ரெட்டி. பின்னர் நடுநிசி நாய்கள், வெடி, வேட்டை உள்ளிட்ட தமிழ் படங்களில் தோன்றி இங்கு பிரபலமானவர்.

ஹிந்தி, தெலுங்கு. பெங்காளி உள்ளிட்ட மொழிகளிலும் அதிக அளவில் படங்களை நடித்து வந்த இவர் 2013 ஆம் ஆண்டிற்கு பிறகு படங்கள் எதிலும் கமிட் ஆகவில்லை. 2014 ஆம் ஆண்டு பாரம்பரிய மகாராஷ்டிரா விழாவில் அக்ஷய் வர்தே என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு...chiyaan 61 update : வெளியூர் புறப்படும் சீயான் 61 டீம்.. ஃபர்ஸ்ட் லுக் எப்ப தெரியுமா?

முன்னதாக கர்ப்ப காலம் முதல் பிரசவம் வரை அனைத்து வீடியோக்களையும் பகிர்ந்து கொண்ட நடிகை சமீரா ரெட்டி.  அவ்வப்போது தனது குடும்பத்துடன் புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். அதோடு மேக்கப் செய்யாமல் ஹேர் டை கூட செய்யாமல் வயதான தோற்றத்துடன் இருக்கும் வீடியோக்களை வெளியிட்டு பெருமிதமாக பேசிக் கொண்டிருந்தார்.  இந்நிலையில் தற்போது பாத் டப்பில் நுரையுடன் இருக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார். அவருடன் டீமும் இடம்பெற்றுள்ளது.

மேலும் செய்திகளுக்கு...படுக்கையில் இருந்தபடி...பார்ப்பவர்களை பக்கென்றாக்கும் ஆண்ட்ரியா...

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios