'தீ இவன்' படத்தில் நவசர நாயகன் கார்த்திக்குடன் குத்தாட்டம் போடும் சன்னி லியோன்..!
T.M.ஜெயமுருகன் இயக்கத்தில் உருவாக உள்ள 'தீ இவன்' படத்தில் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் கார்த்திக்குடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாட உள்ள தகவல் வெளியாகியுள்ளது.
மனிதன் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகி வரும் படம் 'தீ இவன்'. நீண்ட இடைவெளிக்கு பின்னர் நவரச நாயகன் கார்த்திக், சுகன்யா, ராதா ரவி, சுமன், ஸ்ரீதர், ஹேமந்த் மேனன், அபிதா, அஸ்மிதா, யுவராணி, தீபிகா, சிங்கம் புலி, ஜான் விஜய், சரவண சக்தி, இளவரசு, சுப்புராஜ், விஜய் கணேஷ் மற்றும் பலர் இந்த படத்தில் நடித்து வருகிறார்கள்.
ரோஜா மலரே, அடடா என்ன அழகு, சிந்துபாத் ஆகிய படங்களை இயக்கி தயாரித்த T. M. ஜெயமுருகன் இந்த படத்திற்கு, கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்கள் எழுதி இசையமைத்து இயக்கியுள்ளார். Y. N. முரளி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டு வருகிறார். மொகமத் இத்ரிஸ் படத்தொகுப்பு செய்கிறார். A. J. அலி மிர்ஸா என்பவர் பின்னணி இசை பணிகளை மேற்கொள்ள உள்ளார். இந்த படத்தை பிரமாண்ட பொருட்செலவில் நிர்மலாதேவி ஜெயமுருகன் தயாரித்துள்ளார்.
மேலும் செய்திகள்: திருமண கோலத்தில் கழுத்தில் தாலியோடு குத்தாட்டம் போடும் கீர்த்தி சுரேஷ்! வைரலாகும் படக்குழு வெளியிட்ட போஸ்டர்!
இந்த படம் பற்றி இயக்குனர் T.M. ஜெயமுருகன் கூறுகையில்....
நம் தமிழ் சமுதாயம் கலை மற்றும் கலாச்சாரம், சமூக உறவுகளை கொண்டு கட்டமைக்கப்பட்டது ஆனால் இன்று அவைகள் கட்டுப்பாடுகளை இழந்து வருகிறது. இன்றைய இளம் தலைமுறைக்கு நம் உறவையும் கலாச்சாரத்தையும் கொண்டுசெல்லும் விதமாக இந்தப் படம் உருவாக்கப்படுகிறது. இந்த படத்தில் இடம் பெற உள்ள " மேலே ஆகாயம் கீழே பாதாளம் நடுவில் ஆனந்தம் " என்ற பாடலுக்கு நடிகை சன்னி லியோனை நடனமாட வைக்க வேண்டும் என்று வெகு நாட்கள் காத்திருந்தோம்.
மேலும் செய்திகள்: Happy Birthday Keerthy Suresh : மனைவியுடன் கீர்த்தியின் பிறந்தநாள் புகைப்படத்தை பகிர்ந்த அட்லீ
அந்த ஆசை தற்போது நிஜமாகியுள்ளது. நேற்றைய முன்தினம் மும்பை சென்று நடிகை சன்னி லியோனை நேரில் சந்தித்து படம் பற்றி கூறினேன் கதை மற்றும் நடிகர்களை கேட்டவுடன் அந்த பாடலுக்கு நடமாட ஒப்புக்கொண்டார். அத்தோடு பாடல் வரிகள் சிறப்பாக உள்ளதாக தெரிவித்தார். இந்த பாடலின் படப்பிடிப்பு நவம்பர் 15 ஆம் தேதி சென்னையில் மிக பிரம்மாண்டமாக செட் அமைத்து நடைபெற உள்ளது என்று கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்: நேத்து டூப் போட்டு ஏமாத்திட்டாங்க... ஆனா இன்னைக்கு...! அஜித்தின் மாஸ் எண்ட்ரியால் அதிர்ந்த சென்னை ஏர்போர்ட்
- gautham karthik imitate navarasa nayagan karthick
- hot sunny leone
- jism 2 sunny leone
- karthik
- karthik songs
- navarasa nayagan
- navarasa nayagan karthick
- navarasa nayagan karthick thee ivan movie
- navarasa nayagan karthik
- navarasa nayagan karthik hits
- navarasa nayagan karthik movies
- navarasa nayagan karthik padal
- navarasa nayagan karthik songs
- sunny
- sunny leone
- sunny leone dance
- sunny leone funny
- sunny leone funny video
- sunny leone hot
- sunny leone latest songs
- sunny leone movie
- sunny leone movies
- sunny leone new song
- sunny leone song
- sunny leone songs
- sunny leone videos
- sunny leones album songs
- sunny leones hot songs