- Home
- Cinema
- தொலைக்காட்சி
- விஜியை குறிவைக்கும் சுந்தரபாண்டியன் - லாவண்யா கூட்டணி! நடுவில் சிக்கித் தவிக்கும் விஜி - செல்லமே செல்லமே அதிரடி!
விஜியை குறிவைக்கும் சுந்தரபாண்டியன் - லாவண்யா கூட்டணி! நடுவில் சிக்கித் தவிக்கும் விஜி - செல்லமே செல்லமே அதிரடி!
Sundarapandian and Lavanya partnership against Viji : செல்லமே செல்லமே சீரியலில் நினைத்து காரியமும் நிறைவேறாததால் சுந்தரபாண்டியன் விஜியை பழிவாங்கும் எண்ணத்தில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார். இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை இதில் பார்க்கலாம்.

விஜியை பழிவாங்கும் சுந்தரபாண்டியன்:
Sundarapandian and Lavanya partnership against Viji :சுந்தரபாண்டியனும் லாவண்யாவும் இருவரும் சேர்ந்து விஜய் ரொம்ப சந்தோசமா வேலை பார்த்துகிட்டு இருக்கா என்று பேசிக்கொண்டு அவர் நிற்கும் இடத்திற்கு வந்து துணி மூட்டை வந்திருக்கு அதை போய் தூக்கி வை என்று சுந்தரபாண்டியன் சொல்கிறார். அதற்கு விஜி சுந்தர பாண்டியனிடம் நான் எப்படி லோடலா இறக்கி வைக்கிறது எப்பவும் ஆம்பளைங்க தான இறக்கி வைப்பாங்க என்று கேட்கிறார் அதற்கு சுந்தரபாண்டியன் ஏன் ஆம்பளைங்கனா இளிச்சவாய்ங்களா அவங்கள மாதிரி நீயும் இங்க வேலை தான் பாக்குற. இங்க ஆம்பள பொம்பள எல்லாம் ஒன்னு தான்.
Sundarapandian and Lavanya's partnership against Viji
போமா போய் சீக்கிரம் எடுத்து வை வண்டி ரொம்ப நேரம் நின்னா அப்புறம் டிராபிக் ஆயிரும் என்று விஜியை பழி வாங்குகிறார் சுந்தரபாண்டியன். என்ன சொல்லிக்கிட்டே இருக்கேன் காது கேட்கலையா சீக்கிரம் போ என்று மிரட்டுகிறார் சுந்தரபாண்டியன் எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருக்கிறார் விஜி.
லாவண்யாவின் சூழ்ச்சி:
சுந்தரபாண்டியன் இருங்க அவ நீங்க சொன்னா எல்லாம் கேட்க மாட்டா எனக்கு தானே அசிஸ்டன்ட். அவ நான் சொன்னாதானே செய்வா என்ன விஜி என்று மிகவும் திமிராக பேசுகிறார் லாவண்யா. போ போ லோட் எல்லாம் இறக்கி பத்திரமா ஸ்டோர் ரூம்ல போய் வை 7th ப்ளோர்ல இருக்குற ஸ்டோர் ரூம்ல வை என்று சொல்கிறார் லாவண்யா. என்ன என்னையவே முறைக்கிற என்று திமிராக பேசுகிறார் லாவண்யா.
Chellame Chellame Serial Today Episode Tamil
என்ன மேடம் நீங்க பேசினாலும் அதே ரியாக்சன் தான் யாரு சொன்னாலும் கேட்க மாட்ட போலையே. என்று லாவண்யாவை உசுப்பேத்தி விடுகிறார் சுந்தரபாண்டியன். அது எப்படி கேட்காம போயிருவா. விஜி நான் சொல்றத செய்ய மாட்டியா என்ன. செய்வ இல்லன்னா வேலை போயிரும்னு தெரியும்ல வேலை போயிடுச்சுன்னா வருமானம் இல்லாம சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவா.