முடியவே முடியாது என அடம்பிடித்த அசல் கோளாரு... அதிரடி ஆக்‌ஷன் எடுத்த பிக்பாஸ் - வைரலாகும் வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடைபெற்று வரும் பொம்மை டாஸ்க்கில் இருந்து இரண்டு போட்டியாளர்களை அதிரடியாக வெளியேற்றி உள்ளார் பிக்பாஸ்.

Share this Video

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுக்க நானும் பொம்மை.. நீயும் பொம்மை என்கிற டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் தினசரி ஒருவருடன் சண்டைபோட்டு வந்த அசீம், தற்போது அந்த போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளார். இதற்கு காரணம் அசல் கோளாரு தான். அதுகுறித்த புரோமோ தான் தற்போது வெளியாகி உள்ளது.

டால் ஹவுஸில் ஒரு இடம் இருந்தும் அசீமும், அசலும் தங்கள் கையில் உள்ள பொம்மையை அதற்குள் வைக்காமல் இருந்து வந்தனர். அசீமிடம் விக்ரமனின் பொம்மையும், அசலிடம் அசீமின் பொம்மையும் இருந்தது. இதில் இருவருக்கும் இடையே போட்டி நடத்தப்படும் என பிக்பாஸ் அறிவித்தும், இந்த போட்டியில் அசல் விளையாட மறுத்தார்.

இதன் காரணமாக அசீம் மற்றும் அசல் கைவசம் உள்ள இரண்டு பொம்மைகளும் ஆட்டத்தில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்தார் பிக்பாஸ். அசல் கோளாரின் தந்திர விளையாட்டின் காரணமாக அசீமும், விக்ரமனும் இந்த போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

இதையும் படியுங்கள்...அடடே... ஓடிடி-யில் முன்கூட்டியே ரிலீசாகும் பொன்னியின் செல்வன்! ஆனா அதுல ஒரு டுவிஸ்ட் வைத்த அமேசான் பிரைம்

Related Video