அடடே... ஓடிடி-யில் முன்கூட்டியே ரிலீசாகும் பொன்னியின் செல்வன்! ஆனா அதுல ஒரு டுவிஸ்ட் வைத்த அமேசான் பிரைம்
பொன்னியின் செல்வன் திரைப்படம் நவம்பர் 11-ந் தேதி ஓடிடி-யில் வெளியாகும் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது முன்கூட்டியே ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
லைகா நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ள படம் பொன்னியின் செல்வன். மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தின் முதல் பாகம் கடந்த மாதம் 30-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரிலீசுக்கு முன்பே இப்படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. படமும் ரசிகர்களை திருப்தி படுத்தும் வகையில் அமைந்திருந்தது.
பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி ஒரு மாதம் ஆக உள்ள நிலையில், இன்னும் மவுசு குறையாமல் திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டு வருகிறது. தீபாவளிக்கு ரிலீசான பிரின்ஸ் படம் சரியாக போகாததால், அப்படத்திற்கான திரையரங்குகளையும் பொன்னியின் செல்வன் ஆக்கிரமித்து உள்ளன. இதனால் விரைவில் இப்படம் ரூ.500 கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... அடுத்த அதிரடிக்கு தயாரான கமல் - லோகேஷ் கூட்டணி! பிரம்மாண்டமாக நடக்கும் விக்ரம் 100-வது நாள் விழா - முழு விவரம்
பொன்னியின் செல்வன் படம் நவம்பர் மாதம் 11-ந் தேதி ஓடிடி-யில் வெளியிடப்பட இருப்பதாக நேற்று செய்திகள் வெளியாகின. ஆனால் தற்போது அதில் ஒரு டுவிஸ்ட் வைத்து படத்தை முன்கூட்டியே, அதாவது நவம்பர் 4-ந் தேதியே ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது அமேசான் பிரைம் நிறுவனம். அந்த டுவிஸ்ட் என்னவென்றால் இப்படத்தை தியேட்டரில் டிக்கெட் வாங்கி பார்ப்பது போல், ஓடிடி-யில் ரூ.199 செலுத்தினால் மட்டுமே பார்க்க முடியும் என்பது தான்.
இதற்கு முன் கே.ஜி.எஃப், ஆர்.ஆர்.ஆர் போன்ற படங்கள் இந்த முறையில் வெளியாகி இருக்கின்றன. அதற்கு பின்னர் பொன்னியின் செல்வன் தான் இப்படி காசு கட்டி பார்க்கும் முறையில் வெளியாக உள்ளது. ஓடிடி-யில் வெளியான ஒருவாரத்திற்கு பின், அதாவது நவம்பர் 11-ந் தேதி முதல் அமேசான் பிரைம் சந்தாதாரர்கள் இலவசமாகவே பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... பணத்துக்காக வாடகைத் தாயாக மாறும் சமந்தா... surrogacy முறையில் நடக்கும் மோசடிகளை தோலுரிக்கும் யசோதா டிரைலர் இதோ