பணத்துக்காக வாடகைத் தாயாக மாறும் சமந்தா... surrogacy முறையில் நடக்கும் மோசடிகளை தோலுரிக்கும் யசோதா டிரைலர் இதோ

ஹரி மற்றும் ஹரீஷ் இயக்கத்தில் சமந்தா நடிப்பில் பான் இந்தியா படமாக உருவாகி உள்ள யசோதா படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

First Published Oct 28, 2022, 7:27 AM IST | Last Updated Oct 28, 2022, 7:27 AM IST

நடிகை சமந்தா நடிப்பில் உருவாகி உள்ள திரில்லர் படம் தான் யசோதா. ஹரி மற்றும் ஹரீஷ் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள இப்படத்தில் நடிகை சமந்தா உடன் வரலட்சுமி சரத்குமார், சம்பத் ராஜ், முரளி சர்மா, உன்னி முகுந்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்து உள்ளார்.

யசோதா திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் 11-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில், யசோதா படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் படு வைரல் ஆகி வருகின்றன. இப்படத்தின் தமிழ் டிரைலரை சூர்யாவும், தெலுங்கு டிரைலரை விஜய் தேவரகொண்டாவும், கன்னட டிரைலரை ரக்‌ஷித் ஷெட்டியும், மலையாள டிரைலரை துல்கர் சல்மானும், இந்தி டிரைலரை வருண் தவானும் வெளியிட்டனர்.

இந்த டிரைலரை பார்க்கும் போது இப்படம் வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்வதில் நடக்கும் முறைகேடுகளை பற்றி பேசுகிறது என்பது தெரிகிறது. இதில் நடிகை சமந்தாவும் வாடகைத் தாயாகவே நடித்து இருக்கிறார். ஏழை வீட்டு பெண்ணான அவர் பணத்துக்காக வாடகைத் தாயாக மாறி அதன்பின் என்னென்ன பிரச்சனைகளையெல்லாம் சந்திக்கிறார் என்பதே இப்படத்தின் கதை. டிரைலர் விறுவிறுப்பாக உள்ளதால் படமும் இதேபோல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... டேஞ்சர் ஜோனில் மூன்று பேர்... இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறப்போவது இவரா?

Video Top Stories