Asianet News TamilAsianet News Tamil

இப்போ எங்க போச்சு உங்க மனிதாபிமானம்... தனலட்சுமியை தாக்கிய அசீம் - வீடியோ பார்த்து கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நானும் பொம்மை... நீயும் பொம்மை டாஸ்கின் போது தனலட்சுமியை அசீம் தள்ளிவிட்ட வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

First Published Oct 27, 2022, 10:12 AM IST | Last Updated Oct 27, 2022, 10:13 AM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நானும் பொம்மை... நீயும் பொம்மை என்கிற டாஸ்க் நடத்தப்பட்டு வருகிறது. இதில் போட்டியாளர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டு உள்ளது. நேற்று ஷெரினா கீழே விழுந்து காயமடைந்தார். தனலட்சுமி தான் அவரை தள்ளிவிட்டதாக அசீம் சொல்ல, தனலட்சுமி தான் அப்படி செய்யவே இல்லை என மறுத்து வந்தார்.

அந்த டாஸ்க் இன்றும் தொடர்கிறது. அப்போது அசீம் தனது பொம்மையை எடுத்துக்கொண்டு அங்குள்ள டால் ஹவுஸில் வைக்க முயலும் போது தனலட்சுமி அவரை தடுக்கிறார். பின்னர் உள்ளே இருந்த பொம்மையை தூக்கி வெளியே எறிந்ததை பார்த்து கடுப்பான அசீம், தனலட்சுமியை தள்ளிவிட்டு உள்ளே செல்ல முயல்கிறார்.

இதுகுறித்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி இருக்கும் புரோமோவில் இடம்பெற்று உள்ளது. அதைப் பார்த்த நெட்டிசன்கள், அசீமின் செயலை பார்த்து அவரை திட்டித்தீர்த்து வருகின்றனர். கடந்த வாரம் போல் இந்த வாரமும் அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றுமாறும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... பிக்பாஸில் இருந்து வெளியேறினாலும்... ஜிபி முத்து தான் வெற்றிநாயகன் - தேசிய விருது வென்ற இயக்குனர் புகழாரம்

Video Top Stories