Asianet News TamilAsianet News Tamil

நீயெல்லாம் ஜீரோ.... மகேஸ்வரியை வெளுத்து வாங்கிய அசீம் - மீண்டும் வெடித்த சண்டையால் பரபரக்கும் பிக்பாஸ் வீடு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு வாரங்களாக கமல்ஹாசனிடம் திட்டுவாங்கியதால் இந்த வாரம் பொறுமையாக இருந்து வந்த அசீம், தற்போது மகேஸ்வரி உடன் சண்டை போட்டுள்ளார்.

First Published Nov 4, 2022, 10:01 AM IST | Last Updated Nov 4, 2022, 10:02 AM IST

பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில், இந்த வாரம் போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிந்து ‘அந்த டிவி’ ‘இந்த டிவி’ என டாஸ்க் விளையாடி வருகின்றனர். இதில் நேற்று நடன நிகழ்ச்சி, டிராமா என கலைகட்டி இருந்த பிக்பாஸ் வீட்டில் இன்று மகேஸ்வரி - அசீமுக்கு இடையே சண்டை ஏற்பட்டு உள்ளது. இவர்கள் இருவரும் ஒரே அணியை சேர்ந்தவர்கள் ஆவர்.

இதில் அசீமுக்கு பிரேக்கிங் நியூஸ் பற்றி தெரியவில்லை என மகேஸ்வரி கூறியதை கேட்டு கடுப்பான அசீம் அவரிடம், நீங்கள் நடுவராக இருக்க தகுதியில்லாதவர் என்றும் அதில் நீங்கள் ஜீரோ என்றும் பதிலடி கொடுத்து பேசிய காட்சிகள் தற்போது வெளியாகி உள்ள புரோமோவில் இடம்பெற்று உள்ளது.

இதைப்பார்த்த ரசிகர்கள் பொறுத்தது போதும் பொங்கி எழு தலைவா என அசீமுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏனெனில் கடந்த வாரம் கமல் திட்டியதால் இந்த வாரம் முழுக்க அசீம் அமைதியாக இருந்து வந்தார். ஆனால் மகேஸ்வரி, தனலட்சுமி ஆகியோர் அவரை தொடர்ந்து டிரிகர் செய்ததால் தற்போது மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பி உள்ளார் போல தெரிகிறது.

இதையும் படியுங்கள்... சறுக்கிய டாப் ஹீரோஸின் படங்கள்... பரிதாப நிலையில் பாலிவுட் - இந்த வருடம் மட்டும் இத்தனை பிளாப் படங்களா..!

Video Top Stories