MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சறுக்கிய டாப் ஹீரோஸின் படங்கள்... பரிதாப நிலையில் பாலிவுட் - இந்த வருடம் மட்டும் இத்தனை பிளாப் படங்களா..!

சறுக்கிய டாப் ஹீரோஸின் படங்கள்... பரிதாப நிலையில் பாலிவுட் - இந்த வருடம் மட்டும் இத்தனை பிளாப் படங்களா..!

பாலிவுட்டிற்கு 2022 ஆம் ஆண்டு மிகவும் சோகமான ஆண்டு என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் அங்கு கடந்த 10 மாதங்களாக ரிலீசான படங்களை எடுத்துப் பார்த்தால் பிளாப் ஆன படங்கள் தான் அதிகம் இருக்கும். அதிலும் குறிப்பாக அங்குள்ள சூப்பர்ஸ்டார் நடிகர்கள் நடித்த படங்கள் எதுவும் இந்த ஆண்டு எடுபடவில்லை. அந்த வகையில், இந்த ஆண்டு அதிக தோல்வி படங்களை கொடுத்த முன்னணி பாலிவுட் நடிகர்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Nov 04 2022, 09:11 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

அக்‌ஷய் குமார்

அக்‌ஷய் குமார் தான் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். ஏனெனில் இந்த ஆண்டு இவர் நடிப்பில் பச்சன் பாண்டே, சாம்ராட் பிருத்விராஜ், ரக்‌ஷா பந்தன், கட்புட்லி மற்றும் ராம் சேது ஆகிய 5 திரைபடங்கள் வெளியாகின. இவற்றில் கட்புட்லி மட்டும் நேரடியாக OTTயில் வெளியானது. மீதமுள்ள நான்கு படங்களும் திரையரங்குகளில் ரிலீசாகி படுதோல்வியை சந்தித்தன. இதில் ஒரு படம் கூட அப்படத்தின் பட்ஜெட் தொகையை கூட வசூலிக்கவில்லை.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28

அமிதாப் பச்சன்

பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் தான் இந்த பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளார். அவர் நடிப்பில் இந்த ஆண்டு ஜூண்ட், ரன்வே 34, பிரம்மாஸ்திரா மற்றும் குட்பை ஆகிய நான்கு திரைப்படங்கள் ரிலீசாகின. இதில் பிரம்மாஸ்திராவை தவிர மற்ற மூன்று படங்களும் பாக்ஸ் ஆபிஸில் படு தோல்வியை சந்தித்தன. 

38

அஜய் தேவ்கன்

அஜய் தேவ்கனுக்கு இந்த ஆண்டு கலவையான ஒன்றாகவே அமைந்துள்ளது. ஏனெனில் இந்த வருடம் அவர் கேமியோ ரோலில் நடித்த கங்குபாய் கத்தியவாடி மற்றும் ஆர்ஆர்ஆர் ஆகிய படங்கள் வெற்றி அடைந்தன. ஆனால் அவர் நாயகனாக நடித்த ரன்வே 34 மற்றும் தேங்க் காட் ஆகிய படங்கள் படு தோல்வியை சந்தித்தன. 

48

அமீர்கான்

அமீர்கான் நடிப்பில் கடந்த 4 வருடங்களாக எந்த ஒரு படமும் ரிலீசாக வில்லை. 4 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் அவர் நடிப்பில் வெளியான படம் தான் லால் சிங் சத்தா. பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் பாய்காட் டிரெண்ட் காரணமாக, படுதோல்வியடைந்தது. இதனால் இப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டது.

58

ரன்வீர் சிங்

ரன்வீர் சிங் நடிப்பில் ஒந்த ஆண்டு ஒரே படம் தான் ரிலீசானது. அது தான் ஜெயேஷ்பாய் ஜோர்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மோசமான விமர்சனங்களை பெற்றதால் பிளாப் ஆனது. பாக்ஸ் ஆபிஸிலும் இப்படம் கடும் சரிவை சந்தித்தது, அதன் பட்ஜெட்டில் பாதியைக் கூட வசூலிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... விடுதலைக்கு முன்... நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாக உள்ள வெற்றிமாறனின் புதிய படம் - வைரலாகும் டிரைலர் இதோ

68

ஹிருத்திக் ரோஷன்

தமிழில் விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான விக்ரம் வேதா திரைப்படம், இந்தியிலும் அதே பெயரில் ரீமேக் செய்யப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் ரிலீஸ் செய்யப்பட்டது. சைஃப் அலி கான் மற்றும் ஹிருத்திக் ரோஷன் நடித்திருந்த இப்படம் தமிழ் படம் ரேஞ்சுக்கு இல்லை என்பதால், இப்படத்தின் வசூலும் சிறப்பாக இல்லை.

78

டைகர் ஷெராஃப்

டைகர் ஷெராஃப்பின் கெரியரில் திருப்புமுனையாக அமைந்த படம் தான் ஹீரோபண்டி. இந்த படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு ரிலீசானது. முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதால் 2-ம் பாகமும் பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் படு தோல்வியை சந்தித்தது.

88

ஷாஹித் கபூர்

ஷாஹித் கபூர் நடிப்பில் இந்த ஆண்டு ஜெர்சி படம் மட்டும் ரிலீசானது. இப்படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை தள்ளிப் போய் இறுதியாக ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆனது. இப்படம் சூப்பராக இருந்தும் பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியை சந்தித்தது. இதற்கு காரணம் இப்படம் ரிலீசான சமயத்தில் யாஷின் கேஜிஎஃப் 2 திரைப்படம் பாலிவுட்டில் சக்கைப்போடு போட்டு வந்தது.

இதையும் படியுங்கள்...  பொன்னியின் செல்வனாக பிரதிபலிக்க என்ன தவம் செய்தேனோ... சதய விழா குறித்து ரீல் ராஜ ராஜசோழன் நெகிழ்ச்சி

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அமிதாப் பச்சன்
ஆமிர் கான்
அஜய் தேவ்கன்
பாலிவுட்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved