Asianet News TamilAsianet News Tamil

கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுன... அசீமை தூக்கி ஜெயில்ல போட்ட ஹவுஸ்மேட்ஸ் - பிக்பாஸ் புரோமோ இதோ

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நடந்த டாஸ்க்கின் அடிப்படையில் மோசமாக விளையாடிய போட்டியாளராக அசீமை தேர்ந்தெடுத்து அவரை ஜெயிலுக்கு அனுப்பி உள்ளனர்.

First Published Oct 28, 2022, 12:55 PM IST | Last Updated Oct 28, 2022, 12:55 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நானும் பொம்மை.. நீயும் பொம்மை என்கிற டாஸ்க் நடத்தப்பட்டது. இந்த டாஸ்க்கால் பிக்பாஸ் வீடே களேபரம் ஆனது என்று தான் சொல்ல வேண்டும். இதில் அசீம் விளையாடிய விதம் பலருக்கும் வெறுப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக தனலட்சுமியை டார்கெட் செய்து அவரை தள்ளிவிட்டதற்கு கண்டனம் தெரிவித்த நெட்டிசன்கள் அவரை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதுஒருபுறம் இருக்க இந்த டாஸ்க் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. இந்த டாஸ்க்கின் இறுதியில் இதில் சிறப்பாக விளையாடிய போட்டியாளர்கள் யார்? மோசமாக விளையாடிய 2 போட்டியாளர்கள் யார் என்பதை சக ஹவுஸ்மேட்ஸ் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படி ஹவுஸ்மேட்ஸால் மோசமாக விளையாடிய போட்டியாளர்கள் என்று தேர்ந்தெடுக்கப்படும் இருவர் ஜெயிலில் அடைக்கப்படுவர்.

அந்த வகையில்  நானும் பொம்மை.. நீயும் பொம்மை டாஸ்க்கில் மோசமாக விளையாடிய போட்டியாளர்கள் என அசீம் மற்றும் ஷிவினை தேர்ந்தெடுத்துள்ளனர். இதையடுத்து சீறுடை அணிந்துகொண்டு இருவரும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இதுகுறித்த காட்சிகள் புரோமோவில் இடம்பெற்று உள்ளன. இதைப்பார்த்த ரசிகர்கள், ‘கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுன... உனக்கு இது தேவை தான்’ என அசீமை திட்டி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... இன்று வெளியாகிறது துணிவு படத்தின் முக்கிய அப்டேட்... அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அந்த சர்ப்ரைஸ் என்ன?

Video Top Stories