இன்று வெளியாகிறது துணிவு படத்தின் முக்கிய அப்டேட்... அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அந்த சர்ப்ரைஸ் என்ன?
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு படத்தின் சர்ப்ரைஸ் அப்டேட் இன்று வெளியாக உள்ளதாக் தகவல் பரவி வருகிறது.
அஜித் நடித்துள்ள துணிவு படத்தை எச்.வினோத் இயக்கி உள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றும் மூன்றாவது படம் இதுவாகும். இதற்கு முன்னர் வலிமை, நேர்கொண்ட பார்வை ஆகிய படங்கள் இவர்களது காம்போவில் வெளியானது. இந்த மூன்று படங்களையும் தயாரித்தது போனி கபூர் தான்.
துணிவு படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் வீரா, பிக்பாஸ் பிரபலங்களான அமீர், பாவனி, சிபி ஆகியோரும் நடித்துள்ளனர். வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து இப்படத்தை இயக்கி உள்ளார் இயக்குனர் எச்.வினோத். ஜிப்ரான் இசையமைக்க, நீரவ் ஷா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இதையும் படியுங்கள்... கோலாகலமாக நடந்த நடிகர் ஹரீஷ் கல்யாண் திருமணம்... இணையத்தை கலக்கும் வெட்டிங் கிளிக்ஸ் இதோ
துணிவு படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு கொண்டுவர வேண்டும் என்பதில் படக்குழு உறுதியாக உள்ளது. அதுமட்டுமின்றி விஜய்யின் வாரிசு படத்துக்கு போட்டியாக இப்படத்தை ரிலீஸ் செய்ய உள்ளனர். உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தான் துணிவு படத்தை ரிலீஸ் செய்ய உள்ளனர்.
இதுவரை துணிவு படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் உள்ள நிலையில், இன்று மாலை அதுகுறித்த அறிவிப்பை படக்குழு சர்ப்ரைஸாக வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இன்று மாலை துணிவு படத்தின் ரிலீஸ் அப்டேட்டை படக்குழு வெளியிட உள்ளது. இதனால் அஜித் ரசிகர்களுக்கு இன்று செம்ம ட்ரீட் காத்திருக்கிறது என்பது மட்டும் உறுதி.
இதையும் படியுங்கள்... அடடே... ஓடிடி-யில் முன்கூட்டியே ரிலீசாகும் பொன்னியின் செல்வன்! ஆனா அதுல ஒரு டுவிஸ்ட் வைத்த அமேசான் பிரைம்