கோலாகலமாக நடந்த நடிகர் ஹரீஷ் கல்யாண் திருமணம்... இணையத்தை கலக்கும் வெட்டிங் கிளிக்ஸ் இதோ
தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் ஹரீஷ் கல்யாணுக்கு இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. அதன் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
நடிகர் ஹரீஷ் கல்யாண், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்றதன் மூலம், பாப்புலர் ஆனார். அந்நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக வந்த இவர் இறுதி போட்டி வரை முன்னேறி அசத்தினார். அந்நிகழ்ச்சி தான் இவரது சினிமா கெரியரில் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஹரீஷ் கல்யாணுக்கு சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. அந்த வகையில் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில், இளன் இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாகி அவருக்கு சாக்லேட் பாய் என்கிற பட்டத்தையும் பெற்றுத் தந்தது.
இதையும் படியுங்கள்... அதிதி ராவ் பர்த்டே ஸ்பெஷல்... செக்கச் சிவந்த வானம் போல் மிளிரும் நாயகியின் கிக்கான கிளாமர் போட்டோஸ் இதோ
இதையடுத்து ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் இவர் நடித்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படமும் ஹிட் ஆனதோடு பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூல் பார்த்தது. பின்னர் தனுசு ராசி நேயர்களே, தாராள பிரபு, ஓமணப்பெண்ணே, கசடதபற என அடுத்தடுத்து வித்தியாசமான படங்களில் நடித்து மக்களின் பேவரைட் ஹீரோவானார் ஹரீஷ்.
தற்போது கைவசம் நூறுகோடி வானவில், டீசல் போன்ற படங்களை வைத்து பிசியான நடிகராக வலம் வரும் ஹரீஷ் கல்யாணுக்கு திருமணம் ஆகி உள்ளது. இன்று சென்னையில் நடைபெற்ற இவரது திருமணத்தில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர். இவர் நர்மதா உதயகுமார் என்கிற பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளார். ஹரீஷ் கல்யாணின் திருமண புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... அடடே... ஓடிடி-யில் முன்கூட்டியே ரிலீசாகும் பொன்னியின் செல்வன்! ஆனா அதுல ஒரு டுவிஸ்ட் வைத்த அமேசான் பிரைம்