MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • RK X KH Movie : ரஜினி - கமல் இணையும் படம்... ரெட் ஜெயண்ட்ஸ் வெளியிட்ட பட்டாசான அப்டேட்

RK X KH Movie : ரஜினி - கமல் இணையும் படம்... ரெட் ஜெயண்ட்ஸ் வெளியிட்ட பட்டாசான அப்டேட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் இணைந்து நடிக்க உள்ள படத்தை ரெட் ஜெயண்ட்ஸ் தயாரிக்கிறது. அப்படத்தின் அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 20 2026, 01:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
RK X KH Movie Update
Image Credit : X

RK X KH Movie Update

தமிழ் திரை உலகில் இரு பெரும் ஜாம்பவான்களாக அறியப்படுபவர்கள் தான் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன். இவர்கள் இருவரும் ஆரம்ப காலகட்டத்தில் ஒன்றாக இணைந்து நடித்திருந்தாலும் கடந்த 45 ஆண்டுகளாக ஒரு படத்தில் கூட இணைந்து நடிக்காமல் இருந்து வந்தனர். இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ரஜினியும் கமலும் இணைந்து நடிக்கும் படம் கோலிவுட்டில் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. அப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி இருக்கிறது. அப்படத்தை ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இது அவர்கள் தயாரிக்கும் 17 வது படமாகும்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
நெல்சன் இயக்கும் படம்
Image Credit : X

நெல்சன் இயக்கும் படம்

ரஜினி கமல் இணைந்து நடிக்கும் படத்தை இயக்கப் போவது யார் என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக இருந்தது. அதற்கான விடை தற்போது கிடைத்திருக்கிறது. அதன்படி ரஜினியை வைத்து ஜெயிலர் என்கிற மாஸ் ஹிட் படத்தை இயக்கிய நெல்சன் திலீப் குமார் தான் இந்த பிரம்மாண்ட படத்தை இயக்க உள்ளாராம். இப்படத்தின் அறிவிப்பு வீடியோவையும் தயார் செய்திருக்கிறது படக்குழு. அதில் ரஜினி கமல் இருவரும் விண்டேஜ் கார் ஒன்றில் ஒன்றாக வலம் வருவது போன்ற காட்சிகள் இடம் பெற உள்ளன. இப்படத்திற்கு அனிருத் தான் இசையமைக்க உள்ளார்.

Related Articles

Related image1
அடேங்கப்பா... கமலுடன் சேர்ந்து நடிக்க ரஜினி கேட்ட சம்பளம்... இத்தனை கோடியா? ஆடிப்போன கோலிவுட்
Related image2
ரஜினி உதவி இயக்குநராக வேலை பார்த்த படம் எது தெரிமா? அதுவும் இந்த இயக்குநரிடமா..?
34
பிசியாக நடிக்கும் ரஜினி
Image Credit : x/ikamalhaasan

பிசியாக நடிக்கும் ரஜினி

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது ஜெயிலர் 2 திரைப்படம் தயாராகி வருகிறது. படத்தையும் நெல்சன் தான் இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள அப்படம் இந்த ஆண்டு ஜூன் மாதம் திரைக்கு வர உள்ளது. இது தவிர கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார் ரஜினி. தலைவர் 173 என தற்காலிகமாக அழைக்கப்படும் படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார். அப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரு படங்களை முடித்த பின்னர் ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்.

44
அப்டேட் என்ன?
Image Credit : X

அப்டேட் என்ன?

அதேபோல் கமல்ஹாசனும் தற்போது அரசியலில் பிசியாக இருக்கிறார். அவர் அண்மையில் மாநிலங்களவை எம்பி ஆக தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்துக்கு சென்றிருக்கிறார். அதுமட்டுமின்றி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளதால், அதற்கான பிரச்சாரத்திலும் பிசியாக இருக்கிறார். அவையெல்லாம் முடிந்த பின்னர் அன்பறிவு இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார் கமல். அப்படத்தை முடித்த பின்னரே நெல்சன் இயக்கத்தில் ரஜினி உடன் இணைந்து நடிக்கும் படத்துக்கு வருவார் என கூறப்படுகிறது. இந்தப் படத்தின் அறிவிப்பு வீடியோ நாளை நண்பகல் 12.07 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ரஜினிகாந்த்
கமல்ஹாசன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jana Nayagan : கருப்பு பட ரெக்கார்டை அடிச்சு துவம்சம் செய்ய வரும் ஜனநாயகன்... எப்போ ரிலீஸ் தெரியுமா?
Recommended image2
TVK Vijay: 'தளபதியை' இனி அசைக்கவே முடியாது? உச்சம் தொடும் 'முதல்வர் விஜய்' கிராப்... குரு பெயர்ச்சி தரும் மாஸ் திருப்புமுனை!
Recommended image3
Theatre and OTT Releases : பக்ரீத் விருந்தாக இந்த வாரம் தியேட்டர் & ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் இதோ
Related Stories
Recommended image1
அடேங்கப்பா... கமலுடன் சேர்ந்து நடிக்க ரஜினி கேட்ட சம்பளம்... இத்தனை கோடியா? ஆடிப்போன கோலிவுட்
Recommended image2
ரஜினி உதவி இயக்குநராக வேலை பார்த்த படம் எது தெரிமா? அதுவும் இந்த இயக்குநரிடமா..?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved