MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • டபுள் ஆக்‌ஷனில் மிரட்டும் யாஷ்... வைரலாகும் டாக்ஸிக் படத்தின் அடிபொலி டீசர்..!

டபுள் ஆக்‌ஷனில் மிரட்டும் யாஷ்... வைரலாகும் டாக்ஸிக் படத்தின் அடிபொலி டீசர்..!

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் நடிகர் யாஷ் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் டாக்ஸிக் என்கிற பான் வேர்ல்ட் திரைப்படத்தின் ஆக்‌ஷன் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதைப் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 20 2026, 12:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Toxic Movie Teaser
Image Credit : Youtube

Toxic Movie Teaser

டாக்ஸிக் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும் இந்த பான்-வேர்ல்ட் படத்தை கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார். முன்பு வெளியான யாஷின் கேரக்டர் டீசர் பெரும் ஹிட்டானது. ஐந்து மொழிகளில் டீசர் வெளியாகி உள்ளது. ஒரு வசனம் மூலம் இந்த டீசர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த முறை யுத்தமே வேறு என்ற வசனம் டீசரில் உள்ளது. 1 நிமிடம் 55 வினாடிகள் உள்ள இந்த டீசரில் யாஷ் மாஸ் ஆக்‌ஷனில் மிரட்டியுள்ளார். இந்த டீசர் மூலம் டாக்ஸிக் திரைப்படத்தில் நடிகர் யாஷ், இரட்டை வேடத்தில் நடித்துள்ளது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

24
ஆச்சர்யத்தில் யாஷ் ரசிகர்கள்
Image Credit : Asianet News

ஆச்சர்யத்தில் யாஷ் ரசிகர்கள்

இந்த டீசர் முழுவதும் ரத்தம், ஆக்‌ஷன், சண்டைக் காட்சிகள் நிறைந்துள்ளன. இது பலருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சில ஆக்‌ஷன் காட்சிகள் உடலை சிலிர்க்க வைக்கின்றன. யாஷ் தாடி இல்லாத புதிய லுக்கில் தோன்றியுள்ளார். கே.ஜி.எஃப் படத்திற்குப் பிறகு சுமார் 8 வருடங்களாக தாடியுடன் இருந்த யாஷை, தாடி இல்லாமல் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். இப்படத்தில் யாஷ் ராவணன் போன்ற தோற்றத்தில் காட்சியளிக்கிறார். இதை பலரும் பாராட்டி வருகின்றனர். டீசர் வெளியான அரை மணி நேரத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட கமெண்ட்கள் வந்தன.

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by N A Y A N T H A R A (@nayanthara)

Related Articles

Related image1
Toxic : ஜனநாயகனை போல் டாக்ஸிக் படத்திற்கும் சென்சாரில் காத்திருக்கும் ஆப்பு..!
Related image2
சம்பள விஷயத்தில் யாஷுக்கு டஃப் கொடுத்த நயன்தாரா... டாக்ஸிக் பட நட்சத்திரங்களின் சம்பள விவரம் இதோ
34
சர்ச்சையை கிளப்பிய டயலாக்
Image Credit : Asianet News

சர்ச்சையை கிளப்பிய டயலாக்

யாஷ் டீசரில் ஒரு தகாத வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். முந்தைய டீசரில் கார் காட்சி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த முறை இந்த வார்த்தை அனைவரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது. டீசரிலேயே ரத்தம் தெறிக்க தெறிக்க காட்சிகள் உள்ளதால் இப்படத்திற்கு சென்சாரில் கன்ஃபார்ம் ஏ சான்றிதழ் தான் கிடைக்கும் என்பது உறுதியாகி உள்ளது. டாக்ஸிக் திரைப்படம் வருகிற மார்ச் மாதம் 19ந் தேதி திரைக்கு வர உள்ளது. கேஜிஎஃப் 2 படத்துக்கு பின்னர் சுமார் 4 ஆண்டுகள் யாஷ் நடிப்பில் ஒரு படம் கூட ரிலீஸ் ஆகவில்லை. இதனால் டாக்ஸிக் படத்தை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர்.

44
டாக்ஸிக் டீம்
Image Credit : KVN PRODUCTIONS youtube

டாக்ஸிக் டீம்

டாக்ஸிக் திரைப்படத்தில் நடிகர் யாஷ் உடன் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. குறிப்பாக நடிகை நயன்தாராவும் இதில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதுதவிர பாலிவுட் நடிகைகள் ஹூமா குரேஷி, கியாரா அத்வானி ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். டாக்ஸிக் திரைப்படத்தின் டீசரை பார்த்த ரசிகர்கள் அடிபொலியாக இருப்பதாக பாராட்டி வருகின்றனர். இந்த டீசரில் நடிகை நயன்தாராவை ஒரு ஃபிரேமில் கூட காட்டாதது அவரது ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது. ஒருவேளை படத்திலேயே அவரது ரோல் சஸ்பென்ஸாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டாக்சிக் யாஷ் திரைப்படம்
யாஷ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
காதலர்களை சுண்டி இழுக்கும் தமிழ் சினிமா 'கிஸ்' சாங்ஸ்! முத்தத்தின் ஈரத்தை பாட்டில் வடித்த பாடலாசிரியர்கள்!
Recommended image2
காரை அடகு வைத்த முத்து... சீதாவை கொடுமைப்படுத்தும் அருண் - சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த ட்விஸ்ட்
Recommended image3
ஜனனிக்கு வந்த பயம்... மகன்களுக்கு ஆப்பு வைத்த விசாலாட்சி - எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்
Related Stories
Recommended image1
Toxic : ஜனநாயகனை போல் டாக்ஸிக் படத்திற்கும் சென்சாரில் காத்திருக்கும் ஆப்பு..!
Recommended image2
சம்பள விஷயத்தில் யாஷுக்கு டஃப் கொடுத்த நயன்தாரா... டாக்ஸிக் பட நட்சத்திரங்களின் சம்பள விவரம் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved