MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 2026-ல் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூலை வாரிசுருட்டிய டாப் 5 தமிழ் படங்கள் என்னென்ன?

2026-ல் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூலை வாரிசுருட்டிய டாப் 5 தமிழ் படங்கள் என்னென்ன?

Tamilnadu Box Office 2026 : தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் இந்த ஆண்டு 100 கோடி வசூலை கடந்த படங்களில் ரஜினி, சூர்யா, விஜய் படங்களும் உள்ளன. அதன் பட்டியலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Oct 26 2026, 11:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Top 5 Highest Grossing Tamil Movies
Image Credit : X

Top 5 Highest Grossing Tamil Movies

தமிழ் சினிமாவிற்கு 2026-ம் ஆண்டு சூப்பரான ஆண்டாக அமைந்துள்ளது. அதுவும் இந்த ஆண்டின் இரண்டாம் பாதி படுஜோராக உள்ளது. இந்த வருடம் வந்த ஏராளமான சிறு பட்ஜெட் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பியதோடு வசூல் ரீதியாகவும் வெற்றியை ருசித்துள்ளன. அதுமட்டுமின்றி இந்த வருடம் வெளியான ரஜினி, சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் பெரிய பட்ஜெட் படங்களும் பாக்ஸ் ஆபிஸில் சம்பவம் செய்துள்ளன. அது என்னென்ன படங்கள், எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை விரிவாக பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
5. தாய் கிழவி
Image Credit : X

5. தாய் கிழவி

சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் நடிப்பில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆன படம் தாய் கிழவி. இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார். இப்படம் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் ரூ.66.85 கோடி வசூலை வாரிக் குவித்துள்ளது. கம்மி பட்ஜெட்டில் உருவான தாய் கிழவி திரைப்படம் மிகப்பெரிய வசூல் அள்ளி சாதனை படைத்தது. குறிப்பாக அப்படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த பராசக்தி படத்தின் தமிழ்நாடு வசூலைவிட இது அதிகமாகும்.

36
4. மண்டாடி
Image Credit : X/@rsinfotainment

4. மண்டாடி

தமிழ் சினிமா தந்த மற்றுமொரு பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படம் தான் மண்டாடி. சூரி நாயகனாக நடித்த இப்படம் படகுப் பந்தயத்தை மையமாக வைத்து உருவாகி இருந்தது. இப்படத்தில் சூரி உடன் சுஹாஸ், மஹிமா நம்பியார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் கடந்த செப்டம்பர் மாதம் திரைக்கு வந்தது. சூரி நடித்த இப்படம் அவரின் கெரியரில் அதிக வசூல் அள்ளிய படமாக மாறியது. இப்படம் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் மட்டும் 101 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் சாதனை படைத்தது.

46
3. ஜனநாயகன்
Image Credit : X

3. ஜனநாயகன்

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக வலம் வந்தவர் தளபதி விஜய். அவரின் படமும் இந்த பட்டியலில் உள்ளது. அதுதான் ஜனநாயகன். விஜய்யின் கெரியரில் வெளிவந்த கடைசி படம் இதுவாகும். இப்படம் கடந்த ஜூலை மாதம் திரைக்கு வந்து உலகளவில் 300 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது. குறிப்பாக தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் மட்டும் இப்படம் 155 கோடி வசூலித்திருந்தது. ரிலீசுக்கு முன்பே இணையத்தில் லீக் ஆனபோதிலும் இவ்வளவு பெரிய வசூல் அள்ளியது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

56
2. கருப்பு
Image Credit : X

2. கருப்பு

சூர்யாவுக்கு இந்த ஆண்டு ஒரு கோல்டன் இயர் என்றே சொல்லலாம். ஏனெனில் இந்த ஆண்டில் அவர் நடிப்பில் வெளிவந்த இரண்டு படங்களுமே வெற்றிபெற்றன. அதில் கடந்த மே மாதம் ரிலீஸ் ஆன கருப்பு திரைப்படம் சூர்யாவிற்கு மிகப்பெரிய கம்பேக் படமாக அமைந்தது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளிவந்த கருப்பு திரைப்படம் உலகளவில் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்திருந்தது. சூர்யா நடிப்பில் அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையையும் படைத்த கருப்பு திரைப்படம் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் மட்டும் ரூ.164 கோடி வசூல் செய்திருந்தது.

66
1. ஜெயிலர் 2
Image Credit : Asianet News

1. ஜெயிலர் 2

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 திரைப்படம் தான் இந்த லிஸ்ட்டில் முதலிடத்தில் உள்ளது. அப்படத்தை நெல்சன் இயக்கி இருந்தார். அப்படம் கடந்த அக்டோபர் 15ந் தேதி திரைக்கு வந்தது. இரண்டு வாரங்களைக் கடந்தும் திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டு வரும் ஜெயிலர் 2 திரைப்படம் 11 நாட்களில் உலகளவில் ரூ.700 கோடிக்கு மேல் வசூல் அள்ளிய நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் 166 கோடி வசூலித்துள்ளது. இதன்மூலம் இந்த ஆண்டு வெளியான படங்களில் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் அள்ளிய படமாக ஜெயிலர் 2 மாறி உள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் சினிமா
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss Shama : எலிமினேட் ஆன ஷமாவுக்கு பிக் பாஸ் வாரி வழங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Recommended image2
விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா ஜோடி? அதிர்ச்சியில் ரசிகர்கள்
Recommended image3
Now Playing
சேஃப் தாமுவின் மறைவு : மேடையில் கதறி அழுத விஜய் டிவி புகழ் !
Related Stories
Recommended image1
Jailer 2 vs Leo : லியோ பட லைஃப்டைம் வசூல் சாதனையை பீஸ் பீஸாக்கிய ஜெயிலர் 2...!
Recommended image2
Jailer 2 : ஆளாளுக்கு சும்மா அடிச்சு விடுறாங்க... ஜெயிலர் 2 உண்மையான வசூல் இவ்வளவுதான்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved