- Home
- Cinema
- சம்பள விஷயத்தில் யாஷுக்கு டஃப் கொடுத்த நயன்தாரா... டாக்ஸிக் பட நட்சத்திரங்களின் சம்பள விவரம் இதோ
சம்பள விஷயத்தில் யாஷுக்கு டஃப் கொடுத்த நயன்தாரா... டாக்ஸிக் பட நட்சத்திரங்களின் சம்பள விவரம் இதோ
கேஜிஎஃப் நாயகன் யாஷின் புதிய படத்தை கீது மோகன்தாஸ் இயக்குகிறார், அதன் பெயர் 'டாக்ஸிக்'. அப்படத்தில் நடித்துள்ள நட்சத்திரங்களின் சம்பள விவரம் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

Toxic movie cast salary list
தெலுங்கு சினிமாவிற்கு பாகுபலி திருப்புமுனையாக அமைந்ததை போல், கன்னட சினிமாவிற்கு கேஜிஎஃப் திருப்புமுனை தந்தது. அதுவரை கன்னட சினிமா மீது இருந்த பிம்பத்தை அப்படம் தகர்த்து எறிந்தது. கன்னட சினிமாவிகான மவுசை அதிகரிக்க செய்ததில் கேஜிஎஃப் படத்திற்கு மிகப்பெரிய பங்கு உண்டு. அதன் இரண்டாம் பாகம் இந்திய சினிமாவில் மிகப்பெரிய ஹிட் படங்களில் ஒன்றாக மாறியது. அதிக வசூல் செய்த இந்தியப் படங்களின் முதல் 10 பட்டியலில் கேஜிஎஃப் 2 இப்போதும் உள்ளது. கேஜிஎஃப் மூலம் பான்-இந்தியன் அந்தஸ்து பெற்ற யாஷின் அடுத்த படம், நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு வெளியாக உள்ளது.
டாக்ஸிக் திரைப்படம்
'டாக்ஸிக்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை மலையாள இயக்குநரான கீது மோகன்தாஸ் இயக்குவது கூடுதல் சுவாரஸ்யம். இரண்டு நாட்களுக்கு முன்பு யாஷின் பிறந்தநாளன்று வெளியான படத்தின் டீசர் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்போது, யாஷ் உட்பட படத்தின் நடிகர்களின் சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படம் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் நாயகன் என்பதோடு, இணை கதாசிரியராகவும் யாஷ் உள்ளார்.
யாஷின் சம்பளம்
விஜய்யின் 'ஜனநாயகன்' பட தயாரிப்பாளர்களான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தான் இப்படத்தையும் தயாரிக்கிறது. இப்படத்திற்கு ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார். ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். லேட்டஸ்ட் தகவல்களின்படி, இப்படத்தில் யாஷின் சம்பளம் 50 கோடி ரூபாய். பெண் கதாபாத்திரங்களுக்கும் அதிக முக்கியத்துவம் உள்ள இப்படத்தில் ஐந்து கதாநாயகிகள் உள்ளனர். நயன்தாரா, ஹூமா குரேஷி, ருக்மிணி வசந்த், கியாரா அத்வானி, தாரா சுதாரியா ஆகியோர் அவர்கள். இவர்களில் நயன்தாரா மற்றும் கியாரா அத்வானி அதிக சம்பளம் பெறுகிறார்கள்.
நயன்தாரா சம்பளம் எவ்வளவு?
நயன்தாராவுக்கு 12 முதல் 18 கோடி ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும் நிலையில், கியாரா அத்வானிக்கு 15 கோடி ரூபாய் கிடைக்கிறது. ருக்மிணி வசந்திற்கு 3 முதல் 5 கோடி ரூபாய் வரையிலும், ஹூமா குரேஷி மற்றும் தாரா சுதாரியாவுக்கு 2 முதல் 3 கோடி ரூபாய் வரையிலும் சம்பளம் கிடைக்கும். மொழி பேதமின்றி இந்தியப் பார்வையாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் மார்ச் 19 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படம் ஒரு அற்புதத்தை நிகழ்த்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

