Asianet News TamilAsianet News Tamil

இதெல்லாம் சீரியல்ல போய் பண்ணு... சீன் போட்ட அசீம்... நோஸ் கட் பண்ணிய அமுதவாணன் - மாஸான புரோமோ வீடியோ இதோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவ்வளவு நாள் சைலண்டாக இருந்து வந்த அமுதவாணன், தற்போது அசீமுக்கு எதிராக பொங்கி எழுந்த வீடியோ வெளியாகி உள்ளது.

First Published Oct 27, 2022, 1:31 PM IST | Last Updated Oct 27, 2022, 1:31 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நானும் பொம்மை.. நீயும் பொம்மை என்கிற டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் போட்டியாளர்கள் தங்கள் கைவசம் உள்ள பொம்மையை பாதுகாத்துக்கொள்ளவும், தங்கள் அணியில் இருப்பவர்களின் பொம்மையை காப்பாற்றவும் கடுமையாக போட்டி போட்டு வருகிறார்கள்.

இதில் அசீம், ஷெரினா, அசல், ஆயிஷா, மகேஸ்வரி ஆகியோர் ஒரு அணியாக இருந்து விளையாடி வருகின்றனர். அதேபோல் தனலட்சுமி, ஜனனி, அமுதவாணன், ரச்சிதா, ராபர்ட், விக்ரமன் ஆகியோர் ஒரு அணியாக பிரிந்து விளையாடுகின்றனர். இந்த போட்டியின் போது அசீம் எதிரணியினரை தரக்குறைவாக பேசுவதை அமுதவாணன் தட்டிக்கேட்கும் படியான காட்சிகள் தற்போதைய புரோமோவில் இடம்பெற்று உள்ளது.

அசீமின் திமிர் பேச்சைக் கேட்டு கடுப்பான அமுதவாணன், இந்த மாதிரி சீன் போடுற வேலையெல்லாம் சீரியல்ல போய் வச்சிக்க என சொல்லி அவரை நோஸ் கட் செய்யும் காட்சியும் அதில் இடம்பெற்று உள்ளது.

இதையும் படியுங்கள்... பிக்பாஸ் முடிந்ததும் ரச்சிதாவுக்கு ‘அந்த’ இயக்குனருடன் 2-வது திருமணம்... புது குண்டை தூக்கி போட்ட பயில்வான்