MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Vinayagar Chaturthi Wishes in Tamil
Gowri Ganesha Festival Wishes in Tamil
Sevvai Peyarchi 2026
Guru Peyarchi 2027
Gajakesari Yoga
Venus Enters Swati Nakshatra
8th Pay Commission
Bigg Boss Tamil Season 10
Sun Mars Conjunction
8th Pay Commission DA Hike
Horoscope Predictions for All Zodiac Signs
8th Pay Commission News
India's Longest Non Stop Train
Instant Soft Idli Recipes
Samasaptaga Yoga
Ragi Food Recipes
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • பிக்பாஸ் முடிந்ததும் ரச்சிதாவுக்கு ‘அந்த’ இயக்குனருடன் 2-வது திருமணம்... புது குண்டை தூக்கி போட்ட பயில்வான்

பிக்பாஸ் முடிந்ததும் ரச்சிதாவுக்கு ‘அந்த’ இயக்குனருடன் 2-வது திருமணம்... புது குண்டை தூக்கி போட்ட பயில்வான்

நடிகைகள் குறித்த அந்தரங்க விஷயங்களை பற்றி பேசி யூடியூபில் வீடியோ வெளியிட்டு வரும் பயில்வான், ரச்சிதாவின் இரண்டாவது திருமணம் குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். 

1 Min read
Author : Ganesh A
Published : Oct 27 2022, 11:07 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

சரவணன் மீனாட்சி சீரியலில் மீனாட்சியாக நடித்து பேமஸ் ஆனவர் ரச்சிதா. இவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கி உள்ளார். நடிகை ரச்சிதாவுக்கும், சீரியல் நடிகர் தினேஷுக்கும் 7 ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் ஆகிவிட்டது. ஆனால் சமீபத்தில் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்ததாக செய்திகள் வெளிவந்தன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

வெளியில் இருக்கும் போது இதுகுறித்து எந்தவித கருத்துக்களும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்த ரச்சிதா, பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றதும் தான் தனது கணவர் தினேஷை பிரிந்ததற்கான காரணம் குறித்து உருக்கமாக பேசினார். தனது பெற்றோருக்கு தான் பண உதவி எதுவும் செய்யக்கூடாது என தினேஷும், அவரது குடும்பத்தினரும் தடுத்ததாகவும், அதனால் அவரை பிரிந்ததாகவும் கூறி இருந்தார்.

35

அதுமட்டுமின்றி திருமணமாகி 7 ஆண்டுகளாகியும் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருந்து வந்த ரச்சிதாவை அவரது கணவர் குடும்பத்தார் குழந்தை பெற்றுக்கொள்ளும்படி வற்புறுத்தியதும் தனது விவாகரத்து முடிவுக்கு ஒரு காரணம் என ரச்சிதா தெரிவித்திருந்தார். இதன்மூலம் தற்போது தான் சிங்கிளாக இருப்பதை ரச்சிதா உறுதி செய்துள்ளார்.

இதையும் படியுங்கள்... பிக்பாஸில் இருந்து வெளியேறினாலும்... ஜிபி முத்து தான் வெற்றிநாயகன் - தேசிய விருது வென்ற இயக்குனர் புகழாரம்

45

இந்நிலையில், நடிகைகள் குறித்த அந்தரங்க விஷயங்களை பற்றி பேசி யூடியூபில் வீடியோ வெளியிட்டு வரும் பயில்வான், ரச்சிதாவின் இரண்டாவது திருமணம் குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். அதன்படி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் ரச்சிதா இரண்டாவது திருமணம் செய்துகொள்ள உள்ளதாக அவர் கூறி உள்ளார்.

55

ரச்சிதா, சீரியல் இயக்குனர் ஒருவரை ரகசியமாக காதலித்து வந்ததாகவும், அவரைத்தான் அவர் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் பயில்வான் கூறி உள்ளார். பயில்வான் கூறிய இந்த தகவல் சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் அந்த சீரியல் இயக்குனர் யார் என்கிற தகவலை பயில்வான் வெளியிடவில்லை.

இதையும் படியுங்கள்... Brahmastra movie OTT release date : பிரம்மாஸ்திரா ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss Wild Card entry: பிக்பாஸ் வீட்டில் புதிய புயல்..ஆனந்தியின் அதிரடி என்ட்ரி
Recommended image2
Bigg Boss 10 : எஸ்கேப் ஆன முனியம்மா... எலிமினேட் ஆனது யார்? பிக் பாஸ் வரலாற்றில் இப்படி ஒரு எவிக்‌ஷனா..!
Recommended image3
Zee Tamil : விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் புத்தம் புது படங்கள்; ஸ்பெஷல் நிகழ்ச்சிகள் என்னென்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved