TamilNews Highlights: கனமழை காரணமாக நாளை பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. எங்கு தெரியுமா?

Tamil News live updates today on august 2 2022

நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை நீலகிரி மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

3:17 PM IST

ஐடி ரெய்டு...சாக்கு மூட்டையில் கட்டி வைக்கப்பட்ட கட்டு கட்டான பணம் சிக்கியது! அன்பு செழியனுக்கு நெருக்கடி!

சினிமா பைனான்ஸியர் அன்புச்செயலுக்கு நெருக்கமானவர் வீட்டில் இருந்து, ரூபாய் 13 கோடி ரொக்கப்பணம் சிக்கியுள்ளது. அன்பு செழியனுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க... 

2:17 PM IST

மனைவி நடத்தையில் தீராத சந்தேகம்.. தட்டிக்கேட்ட மாமனாரை ஓட ஓட விரட்டி கொன்ற மருமகன்.. செங்கல்பட்டில் பயங்கரம்

மதுபோதையில் இருந்த மருமகன் மாமனார் மற்றும் மாமியாரை கொடூரமாக தாக்கினார். இதில், மாமனார் உயிரிழந்த சம்பவம் செங்கல்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. 
மேலும் படிக்க

1:45 PM IST

நிச்சயதார்த்தம் முடிஞ்சி 3 வருஷம் ஆகியும் விஜயகாந்த் மகனுக்கு திருமணமாகாதது ஏன்?

விஜயகாந்த் மகன் விஜய பிரபாகருக்கு கடந்த 2019-ம் ஆண்டே கோவையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் இளங்கோவன் என்பவரின் மகள் கீர்த்தனாவுடன் திருமணம் நிச்சயம் ஆனது. ஆனால் இவருக்கு இதுவரை நடைபெற வில்லை.மேலும் படிக்க

1:26 PM IST

திருப்பதி கோவில் வரலாற்று சாதனை.. இதுவரை இல்லாத அளவு குவிந்த உண்டியல் காணிக்கை.. எவ்வளவு கோடி தெரியுமா

திருப்பதி கோயிலில் இதுவரை இல்லாத அளவாக  கடந்த ஜூலை மாதம் காணிக்கையாக 139 கோடி ரூபாய் வசூலித்து ஏழுமலையான் கோவில் உண்டியல் சாதனை படைத்துள்ளது. 

மேலும் படிக்க..

12:26 PM IST

இனி ஆண்டுக்கு ஒரு முறை மின்கட்டணம் உயரப்போகுதாம்.. மக்களுக்கு ஷாக் கொடுக்கும் மின்வாரியம்.. புலம்பும் ராமதாஸ்

தமிழக மக்களின் வருமானம் ஆண்டுக்கு 6% உயராதபோது மின்கட்டணம் 6% உயர்த்துவது மக்களை கசக்கிப் பிழியும் செயலாகும் என்று ராமதாஸ் காட்டமாக  தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

12:01 PM IST

மின்னல் வேகத்தில் வந்த கார்...! பொதுமக்கள் மீது மோதி தூக்கி வீசப்பட்டதில் 3 பேர் துடி துடித்து பலி

அரக்கோணம் அருகே பேருந்து நிறுத்தம் அருகில் நின்று கொண்டு இருந்தவர்கள் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து  பொது மக்கள் சாலை மறியல் ஈடுபட்டதால்  5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் படிக்க...

11:59 AM IST

கல்யாணம் ஆசை காட்டி ரூ.30 லட்சம் அபேஸ் செய்த நடிகை திவ்யபாரதி - இளைஞர் பரபரப்பு புகார்

யூடியூப் சேனல் நடத்தி வரும் இளைஞர் ஒருவரை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி துணை நடிகை திவ்யபாரதி என்பவர் ரூ.30 லட்சம் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திவ்யபாரதி தன்னை ஏமாற்றி ரூ.30 லட்சம் மோசடி செய்துவிட்டதாக தாடிக்கொம்பு போலீஸில் புகார் அளித்துள்ளார் ஆன்ந்த்ராஜ். மேலும் படிக்க

10:09 AM IST

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அலுவலகத்தில் சோதனை

சென்னையில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வரும் சம்பவம் திரைத்துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் ரெய்டு நடக்கும் நிலையில் தி.நகரில் தாணு அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. 

9:50 AM IST

சாலை விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக் முதல்வர் ஸ்டாலின் ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். 

9:47 AM IST

அரைலிட்டர் பாலில் 85மில்லி எடை குறைந்தது ஏன்..? வேலியே பயிரை மேய்கிறது...திமுக அரசுக்கு எதிராக சீறிய ஓபிஎஸ்

ஒரு பக்கம் ஆவின் பால் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்துவிட்டு மறுபக்கம் அதனைப் பிடுங்கும் முயற்சியில் அரசு ஈடுபடுகிறதோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
 
மேலும் படிக்க..

9:13 AM IST

டெண்டர் முறைகேடு நெருக்கடி கொடுக்கும் திமுக...! தப்பிப்பாரா இபிஎஸ்..? உச்சநீதிமன்றத்தில் இன்று இறுதி விசாரணை

தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான  எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இன்று முதல் இறுதி கட்ட விசாரணை நடைபெறவுள்ளது.

மேலும் படிக்க...

7:40 AM IST

Non-linear-ல் நான் சீனியர்னு முதல்வரே பாராட்டிட்டாரு! இனி பார்... ப்ளூ சட்டையை மறைமுகமாக எச்சரித்த பார்த்திபன்

சர்ச்சைக்குரிய விமர்சகரான ப்ளூ சட்டை மாறன், இரவின் நிழல் படத்தை உலகின் முதல் Non-linear திரைப்படம் என பார்த்திபன் குறிப்பிடுவது பொய் என்றும், இதன்மூலம் அவர் ரசிகர்களை ஏமாற்றி இருப்பதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார். இந்நிலையில், அதற்கு மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார் பார்த்திபன்.மேலும் படிக்க

7:28 AM IST

அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஜவாஹிரி ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார்

அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார் என அமெரிக்க உளவுத்துறை தெரிவித்ததாக  சிஎன்என் சேனல் செய்தி வெளியிட்டுள்ளது. 

மேலும் படிக்க

7:27 AM IST

திருமணம் ஆகி நாலு மாசம் தான் ஆகுது! அதுக்குள்ள காதல் மனைவி கொலை! காட்டி கொடுத்த சிசிடிவி.. சென்னையில் பயங்கரம்

காதல் மனைவியை குத்திக்கொலை செய்த கணவரிடம் விசாரணை நடத்தப்பட்டுவந்த நிலையில்,  தற்போது அழுகிய நிலையில் இளம் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

7:25 AM IST

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் திடீரென மாயம்

பலுசிஸ்தானில் மூத்த அதிகாரிகளை ஏற்றிச் சென்ற பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் திடீரென மாயமாகியுள்ளது. வெள்ள மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் மாயமான நிலையில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

7:24 AM IST

கேரளாவில் 7 மாவட்டங்களில் ரெட் அலர்ட்

கேரளாவில் 7 மாவட்டங்களில் ரெட் அலர்ட் மற்றும் 2 மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார். மழை காரணமாக இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

3:17 PM IST:

சினிமா பைனான்ஸியர் அன்புச்செயலுக்கு நெருக்கமானவர் வீட்டில் இருந்து, ரூபாய் 13 கோடி ரொக்கப்பணம் சிக்கியுள்ளது. அன்பு செழியனுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க... 

2:17 PM IST:

மதுபோதையில் இருந்த மருமகன் மாமனார் மற்றும் மாமியாரை கொடூரமாக தாக்கினார். இதில், மாமனார் உயிரிழந்த சம்பவம் செங்கல்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. 
மேலும் படிக்க

1:45 PM IST:

விஜயகாந்த் மகன் விஜய பிரபாகருக்கு கடந்த 2019-ம் ஆண்டே கோவையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் இளங்கோவன் என்பவரின் மகள் கீர்த்தனாவுடன் திருமணம் நிச்சயம் ஆனது. ஆனால் இவருக்கு இதுவரை நடைபெற வில்லை.மேலும் படிக்க

1:26 PM IST:

திருப்பதி கோயிலில் இதுவரை இல்லாத அளவாக  கடந்த ஜூலை மாதம் காணிக்கையாக 139 கோடி ரூபாய் வசூலித்து ஏழுமலையான் கோவில் உண்டியல் சாதனை படைத்துள்ளது. 

மேலும் படிக்க..

12:26 PM IST:

தமிழக மக்களின் வருமானம் ஆண்டுக்கு 6% உயராதபோது மின்கட்டணம் 6% உயர்த்துவது மக்களை கசக்கிப் பிழியும் செயலாகும் என்று ராமதாஸ் காட்டமாக  தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

12:01 PM IST:

அரக்கோணம் அருகே பேருந்து நிறுத்தம் அருகில் நின்று கொண்டு இருந்தவர்கள் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து  பொது மக்கள் சாலை மறியல் ஈடுபட்டதால்  5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் படிக்க...

11:59 AM IST:

யூடியூப் சேனல் நடத்தி வரும் இளைஞர் ஒருவரை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி துணை நடிகை திவ்யபாரதி என்பவர் ரூ.30 லட்சம் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திவ்யபாரதி தன்னை ஏமாற்றி ரூ.30 லட்சம் மோசடி செய்துவிட்டதாக தாடிக்கொம்பு போலீஸில் புகார் அளித்துள்ளார் ஆன்ந்த்ராஜ். மேலும் படிக்க

10:09 AM IST:

சென்னையில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வரும் சம்பவம் திரைத்துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் ரெய்டு நடக்கும் நிலையில் தி.நகரில் தாணு அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. 

9:50 AM IST:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். 

9:47 AM IST:

ஒரு பக்கம் ஆவின் பால் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்துவிட்டு மறுபக்கம் அதனைப் பிடுங்கும் முயற்சியில் அரசு ஈடுபடுகிறதோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
 
மேலும் படிக்க..

9:13 AM IST:

தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான  எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இன்று முதல் இறுதி கட்ட விசாரணை நடைபெறவுள்ளது.

மேலும் படிக்க...

7:40 AM IST:

சர்ச்சைக்குரிய விமர்சகரான ப்ளூ சட்டை மாறன், இரவின் நிழல் படத்தை உலகின் முதல் Non-linear திரைப்படம் என பார்த்திபன் குறிப்பிடுவது பொய் என்றும், இதன்மூலம் அவர் ரசிகர்களை ஏமாற்றி இருப்பதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார். இந்நிலையில், அதற்கு மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார் பார்த்திபன்.மேலும் படிக்க

7:28 AM IST:

அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார் என அமெரிக்க உளவுத்துறை தெரிவித்ததாக  சிஎன்என் சேனல் செய்தி வெளியிட்டுள்ளது. 

மேலும் படிக்க

7:27 AM IST:

காதல் மனைவியை குத்திக்கொலை செய்த கணவரிடம் விசாரணை நடத்தப்பட்டுவந்த நிலையில்,  தற்போது அழுகிய நிலையில் இளம் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

7:25 AM IST:

பலுசிஸ்தானில் மூத்த அதிகாரிகளை ஏற்றிச் சென்ற பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் திடீரென மாயமாகியுள்ளது. வெள்ள மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் மாயமான நிலையில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

7:24 AM IST: