மின்னல் வேகத்தில் வந்த கார்...! பொதுமக்கள் மீது மோதி தூக்கி வீசப்பட்டதில் 3 பேர் துடி துடித்து பலி
அரக்கோணம் அருகே பேருந்து நிறுத்தம் அருகில் நின்று கொண்டு இருந்தவர்கள் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து பொது மக்கள் சாலை மறியல் ஈடுபட்டதால் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கார் விபத்து- 3 பேர் பலி
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த எஸ்.ஆர்.கண்டிகை பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் நின்றுக்கொண்டு இருந்தவர்கள் மீது அதிவேகமாக வந்த கார் ஒன்று மோதிய விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். இறந்த 3 பேர் உண்ணாமலை (45), கன்னியப்பன் (65), சீனிவாசன் (45) என தெரியவந்தது. மேலும் விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுனர் வேலூர் சாய்நாதபுரம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மற்றும் அவரது மனைவி மஞ்சுலாஆகிய இருவரை அப்பகுதி மக்கள் சிறைப்பிடித்து வைத்திருந்தனர். விபத்து நடைபெற்றது தொடர்பாக தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் சாலையின் குறுக்கே வேக தடை அமைக்காததால் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுவதாக கூறியும் இது குறித்து பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து சாலையின் குறுக்கே முற்செடிகளை வெட்டி போட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பயணிகள் வேனில் மின்சாரம் தாக்கியதில் 10 பேர் துடி துடித்து உயிரிழந்தனர்.. நள்ளிரவில் பயங்கரம்.
சிலிண்டருக்கு ரூ.200 மானியம் வழங்கப்படுகிறதா..? பாஜக நிர்வாகியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
தகவல் அறிந்து விரைந்து வந்த அரக்கோணம் வட்டாட்சியர் பழனிராஜன், மற்றும் டி.எஸ்.பி பிரபு தலைமையிலான காவல் துறையினர் விசாரணை மேற்க்கொண்டனர். இதனையடுத்து காவல் துறையினர் இறந்த 3 பேரின் உடல்களை கைப்பற்ற முயன்ற போது அதனை தடுத்த அப்பகுதி மக்கள் இறந்தவர்கள் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் அதே போல் போர் கால அடிப்படையில் வேக தடை அமைக்க கோரி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அமைச்சர் காந்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் போராட்டக்காரர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதி அளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. சுமார் 5 மணி நேர தொடர் போராட்டத்தின் காரணமாக அரக்கோணம் – சோளிங்கர் சாலையில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இதையும் படியுங்கள்
திடீர் மயக்கம்...சூடான கூழ் அண்டாவில் விழுந்தவர் பலி...! அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சிகள்