பயணிகள் வேனில் மின்சாரம் தாக்கியதில் 10 பேர் துடி துடித்து உயிரிழந்தனர்.. நள்ளிரவில் பயங்கரம்.

மேற்கு வங்க மாநிலத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற வாகனத்தில் மின்சாரம் தாக்கியதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 16 பேர் கடும் காயம் அடைந்துள்ளனர். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

10 killed in passenger van electrocution in West Bengal

மேற்கு வங்க மாநிலத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற வாகனத்தில் மின்சாரம் தாக்கியதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 16 பேர் கடும் காயம் அடைந்துள்ளனர். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாலை விபத்துகளில் உயிரிழப்போரின் எண்ணிக்கை பரவலாக அதிகரித்துள்ளது. இந்த வரிசையில் ஞாயிற்றுக்கிழமை இரவு மேற்கு வங்க மாநிலம் கூச் பெஹார் ரில்  இந்த விபத்து நடந்துள்ளது. மேற்குவங்க மாநிலம்  கூச் பெஹாரில் ஜல் பேஷ் நோக்கி  27 பயணிகளுடன் நள்ளிரவு 12 மணி அளவில் வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வேலையில் தீடீரென மின்சாரம் பரவியது. அப்போது பயணிகள் அலறினர், வேன் முழுவதும் புகை மூட்டம் ஏற்பட்டது. இதனையடுத்து வேனில் இருந்த 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

10 killed in passenger van electrocution in West Bengal

இதையும் படியுங்கள்:  அதிர்ச்சி !! திடீரென்று தீப்பிடித்து எரிந்த இருசக்கர வாகனம்.. நெல் வியாபாரி சம்பவ இடத்திலே உடல் கருகி பலி..

இதையடுத்து டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடினார், மின்சாரம் தாக்கிய உடனேயே பயணிகள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 25 பேரில் 16 பேர் சிறு காயங்களுடன் ஜல்பைகுரி அரசு பொது மருத்துவமனையல் சிகிச்சை பெற்று வருகின்றனர், 10 பேர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர், முதற்கட்ட விசாரணையில் வேனில் இருந்த டிஜே சிஸ்டத்தில் பொறுத்தப்பட்டிருந்த ஜெனரேட்டரில் மின் கசிவு ஏற்பட்டதால் இந்த விபத்து நடந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

இதையும் படியுங்கள்: தீவிரவாத அமைப்புடன் தொடர்பு… பொறியியல் கல்லூரி மாணவர் கைது!!

10 killed in passenger van electrocution in West Bengal

இந்த விபத்து நள்ளிரவு 12 மணி அளவில் நடந்துள்ளது, தார் லா பாலத்தில் ஜல் பேஷ் நோக்கி வேன் சென்றுகொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், அதில் பயணித்த அனைவரும் சிட்டல் குச்சி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் இந்த கோர சம்பவம் குறித்த அவர்களது குடும்பங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டது என்றும், விபத்துக்குள்ளான வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும், ஏற்கனவே வேன் டிரைவர் தப்பி ஓடி விட்டதாகவும் போலீசார் கூறியுள்ளனர். விபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் மேற்கு வங்க மாநிலத்தில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios