புதுச்சேரியில் சென்றுக் கொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி நெல் வியாபாரி ஒருவர் உடல் கருவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுக்குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் மாஞ்சாலை பகுதியை சேர்ந்த 65 வயதாகும் வேணுகோபால் என்பவர், நெல் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் இவர் நேற்று இரவு தவளக்குப்பம் அருகே உள்ள அபிஷேகப்பாக்கம் சமாதி பேருந்து நிறுத்தம் அருகே தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக அவரது இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
மேலும் படிக்க:5 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண மன்னன்..! 4 வது மனைவி புகாரால் போலீசாரிடம் சிக்கிய மாப்பிள்ளை
இதனை சுதாரித்த வேணுகோபால் உடனே வாகனத்தை விட்டு இறங்கிய போது, நிலை தடுமாறி கீழே விழுந்ததில், அவர் மீது தீப்பிடித்த எரிந்துக்கொண்டிருந்த பைக் விழுந்துள்ளது.இதில் அவர் உடல் முழுவதும் தீப்பிடித்து, சம்பவ இடத்திலே உடல் கருகி அவர் பரிதாபமாக இறந்துள்ளார். மோட்டார் சைக்கிளும் எரிந்து தீக்கிரையாகின. இந்நிலையில் அந்த வழியாக சென்ற சிலர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, விரைந்து வந்த தவளக்குப்பம் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட போலீசார் தீயணைப்பு துறை தகவல் கொடுத்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்களும் அங்கு வந்து, மோட்டார் சைக்கிளில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

மேலும் படிக்க:தீவிரவாத அமைப்புடன் தொடர்பு… பொறியியல் கல்லூரி மாணவர் கைது!!
பின்னர், கருகிய நிலையில் இருந்த வேணு கோபால் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சூழலில் விபத்து நடத்த இடம் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால், இது கொலையாக இருக்கலாமா எனும் கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏனெனில் வழிப்பறி செய்யும் நோக்கில் வேணு கோபாலை மர்ம நபர்கள் வழிமறித்து கொலை செய்து எரித்தனரா என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். மோட்டார் சைக்கிளுடன் வேணுகோபால் சாலையில் தீப்பிடித்து எரியும் வீடியோ வைரலாகி வருகிறது.
