Asianet News TamilAsianet News Tamil

சுட்டெரிக்கும் வெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்? பிரபல மருத்துவர் கனிகா அறிவுரை

கடும் வெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்ள என்ன செய்யலாம் என்று கோவையைச் சேர்ந்த பிரபல தோல் மருத்துவ நிபுணர் கனிகா விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்பாகவே கோடை வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. மேலும் பல இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். வீட்டில் ஏசி, பேன் இன்றி இருக்க முடியாத சூழல் உருவாகி உள்ளது. இதற்கு கோவையும் விதிவிலக்கல்ல. கோவையிலும் கடந்த பிப்ரவரி முதல் வெயிலின் தாக்கம் என்பது அதிகமாகவே இருந்து வருகிறது. குறிப்பாக கோவையில் 102 பாரன்ஹிட் வரை வெப்பம் பதிவாகி உள்ளது. இந்நிலையில் தான் கோவை மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசுவதற்கான வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.மேலும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெப்ப அலையிலிருந்து பொதுமக்கள் தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்பது குறித்து தோல் சிகிச்சை மருத்துவர் கனிதா கூறுகையில், கோவையில் 20 வருடங்களுக்கு பிறகு தற்போது 40 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவாகியுள்ளது. வெப்ப அலைகிலிருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்து டாக்டர். கனிகா, தோல் சிகிச்சை நிபுணர் விளக்கம் அளிக்கிறார்.  வெப்ப அலையால் உடலில் நீர் வற்றி போவதை தடுக்க அதிக அளவில் தண்ணீர் பருக வேண்டும். ஆன்ட்டி ஆக்சைடு மற்றும் சிட்ரஸ் அதிகம் இருக்கும் பல வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். குளிர்பானங்களை தவிர்த்து இளநீர் போன்ற இயற்கையான பானங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். வெளியே வரும்போது தோலுக்கு பாதுகாப்பு கொடுக்கும் ஸ்கின் கிரீம்களை பயன்படுத்த வேண்டும்.

முடிந்தவரை முழு கை சட்டை அணிந்து கொள்வது கடும் வெப்பத்திலிருந்து பாதுகாப்பை கொடுக்கும். வெளியில் அதிகமாக சுற்றுபவர்கள் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை சன் கிரீம்களை பயன்படுத்தலாம். ஜீன்ஸ் போன்ற இறுக்கமான ஆடைகளை பயன்படுத்துவதை தவிர்த்து காட்டன் உடைகளை அணியலாம். கடும் வெப்பத்தால் வேர்க்குரு மற்றும் படர்தாமரை உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் போது தயங்காமல் உடனடியாக தோல் மருத்துவரை அணுக வேண்டும். சரியான சோப்பு மற்றும் ஷாம்புவை பயன்படுத்தி இரண்டு வேளை குளிப்பது உடல் வெப்பத்தை தணிக்கும். குளித்ததற்கு பிறகு தலையில் தேங்காய் எண்ணெய் வைப்பது தவிர்க்க வேண்டும். தேங்காய் எண்ணெயுடன் வியர்வை சேரும் போது தோலுக்கு அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்தார்.

விஜய் கிடையாது.. ரஜினி கிடையாது.. தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர் இவர்தான் தெரியுமா?

Video Top Stories