அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு; தேர்தல் முடிஞ்சிடுச்சி அடிடா மேளத்த - குத்தாட்டம் போட்ட திமுக எம்எல்ஏ
தமிழகத்தில் அண்மையில் மக்களவைத் தேர்தல் நிறைவு பெற்ற நிலையில், அணைக்கட்டு திமுக எம்.எல்.ஏ. A.P.நந்தகுமார்..கட்சி நிர்வாகிகளுடன் சுற்றுலா சென்று நடனம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19ம் தேதி நடைபெற்றது. தேர்தல் முடிந்த கையோடு ஓய்வெடுக்க ஊட்டிக்கு சுற்றுலா சென்ற வேலூர் மத்திய மாவட்ட திமுக செயலாளரும் அணைக்கட்டு திமுக எம்.எல்.ஏ. A.P.நந்தகுமார் உற்சாக கொண்டாட்டம்.
தேர்தல் முடிந்ததும், தேர்தல் பணியில் ஈடுபட்ட ஒன்றிய செயலாளர்கள், பகுதி செயலாளர்கள், அமைப்பு செயலாளர்களை அழைத்துக் கொண்டு சுற்றுலா சென்ற நந்தகுமார் அங்கு பேண்டு வாத்தியங்களுக்கு குத்தாட்டம் போட்டார்.