ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து தப்பினார் அமித் ஷா!

பீகாரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் நிலை தடுமாறிய நிலையில் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்

First Published Apr 29, 2024, 5:34 PM IST | Last Updated Apr 29, 2024, 5:34 PM IST

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பீகார் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியில் தேர்தல் பிரசாரத்தை முடித்து கொண்டு தனி ஹெலிகாப்டரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புறப்பட்டார். அப்போது, அந்த ஹெலிகாப்டர் லேசாக தடுமாறியது.

பலத்த காற்று காரணமாக ஹெலிகாப்டர் தடுமாறியதாக தெரிகிறது. உடனடியாக, சாதூர்யமாக செயல்பட்ட விமானி, ஹெலிகாப்டரை மீண்டும் கட்டுக்குள் கொண்டு வந்ததால் விபத்து தவிர்க்கப்பட்டது. ஹெலிகாப்டர் லேசாக தடுமாறிய நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.