சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தளபதி விஜய் நடிப்பில் வந்த லியோ படத்தை நெட்பிளிக்ஸில் பார்த்துள்ளதை தனது இன்ஸ்டா ஸ்டோரியாக பகிர்ந்துள்ளார்.

இந்தியாவில் ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகிறது. நடப்பு ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தலைமையிலான சிஎஸ்கே விளையாடிய 8 போட்டிகளில் 4ல் வெற்றியும், 4ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடத்தில் இருக்கிறது.

இந்தியாவில் ஐபிஎல் என்றால், தமிழகத்தில் விஜய்யின் அரசியல் எண்ட்ரி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தமிழக வெற்றிக் கழகம் என்று அரசியல் கட்சியை தொடங்கிய விஜய், தமிழகத்தில் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ஆயத்தமாகி வருகிறார். அரசியலில் கால் பதித்த நிலையில், சினிமாவிற்கு முழுக்கு போட்டுள்ளார்.

Scroll to load tweet…

தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் GOAT என்ற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். விஜய், படப்பிடிப்பிற்காக எங்கு சென்றாலும், அங்கு ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு அவருக்கு மாலை அணிவிப்பதும், அவருடன் செஃல்பி எடுப்பதும், தளபதி, விஜய் என்று கோஷமிடுவதும் வழக்கமாகி வருகிறது.

கடந்த 19 ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் விஜய் வாக்களிக்க வந்த நிலையில், அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு நகர முடியாமல் செய்த காட்சியை காண முடிந்தது. மேலும், வாக்களித்த பிறகு பலத்த போலிஸ் பாதுகாப்புடன் விஜய் காரில் ஏறி சென்ற காட்சியும் வைரலானது.

தற்போது விஜய் மற்றும் த்ரிஷா நடிப்பில் வந்த கில்லி படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட் தளபதி விஜய் நடிப்பில் திரைக்கு வந்த லியோ படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்த்து மகிழ்ந்துள்ளார். தனது லேப்டாப்பில் லியோ படத்தை பார்த்ததை இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் பிளேயர் சூர்யகுமார் யாதவ் விஜய் நடிப்பில் வந்த வாரிசு படத்தை விமான சென்றவாறு பார்த்து மகிழ்ந்துள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. சாதாரண ரசிகர்கள் மட்டுமின்றி கிரிக்கெட் பிரபலங்களுக்கும் பிடித்த ஹீரோவாக தளபதி விஜய் இருக்கிறார் என்பதை இதன் மூலமாக அறிந்து கொள்ள முடிகிறது.

Scroll to load tweet…