- Home
- Sports
- Sports Cricket
- IND vs WI: இந்திய அணி பிளேயிங் லெவனில் என்னென்ன மாற்றங்கள்? சஞ்சு சாம்சன் நீக்கமா? முழு அப்டேட்!
IND vs WI: இந்திய அணி பிளேயிங் லெவனில் என்னென்ன மாற்றங்கள்? சஞ்சு சாம்சன் நீக்கமா? முழு அப்டேட்!
சஞ்சு சாம்சன் ஓப்பனிங்கில் களமிறங்கியதால் 3-வது இடத்தில் களமிறங்கிய இஷான் கிஷன், ஜிம்பாப்வேக்கு எதிராக 24 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். எந்த பேட்டிங் நிலையிலும் சிறப்பாக செயல்படும் திறனை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் சூப்பர் 8 போட்டி
டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்று போட்டியில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியதன் மூலம் இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது. மார்ச் 1ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சூப்பர் 8 சுற்று போட்டியில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தினால், இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெறும். வெற்றி முகத்துக்கு திரும்பிய இந்திய அணியில் மாற்றங்கள் இருக்குமா? இருக்காதா? என்பதே இப்போது பேசுபொருளாக உள்ளது.
சஞ்சு சாம்சன் இடத்துக்கு ஆபத்தில்லை
ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியின் மூலம் இந்திய அணியில் மீண்டும் கம்பேக் கொடுத்த சஞ்சு சாம்சன் நல்ல தொடக்கம் அளித்தார். அதிரடியாக 15 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். ஆகவே வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியிலும் அவருக்கு வாய்ப்பு வழங்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
தொடர் தோல்விகளுக்குப் பிறகு அபிஷேக் சர்மா ஃபார்முக்கு திரும்பியுள்ளார். ஜிம்பாப்வேக்கு எதிராக 30 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார். இதில் தலா 2 சிக்ஸர்களும், 4 ஃபோர்களும் அடங்கும். அவரது இடத்துக்கும் சிக்கல் இல்லை.
இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ்
சஞ்சு சாம்சன் ஓப்பனிங்கில் களமிறங்கியதால் 3-வது இடத்தில் களமிறங்கிய இஷான் கிஷன், ஜிம்பாப்வேக்கு எதிராக 24 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். எந்த பேட்டிங் நிலையிலும் சிறப்பாக செயல்படும் திறனை அவர் வெளிப்படுத்தியுள்ளார். நான்காவது இடத்தில் கேப்டன் சூர்யகுமார் யாதவ். உலகக் கோப்பையில் நல்ல ஃபார்மில் உள்ள இவர், ஜிம்பாப்வேக்கு எதிராக 13 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் போட்டியிலும் இது தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திலக் வர்மாவுக்கு இடம் உண்டா?
இதேபோல் ரிங்கு சிங்கிற்கு பதிலாக திலக் வர்மா 6-வது இடத்தில் களமிறக்கப்பட்டார். ஜிம்பாப்வேக்கு எதிராக 16 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். ரிங்கு சிங் அணிக்கு திரும்புவது உறுதியாகாததால், திலக் வர்மா அணியில் தொடர்வார். ஏழாவது வீரர் சிவம் துபே. பேட்டிங்கில் நல்ல ஃபார்மில் இருந்தாலும், பந்துவீச்சில் அதிக ரன்களை விட்டுக்கொடுப்பது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. ஜிம்பாப்வேக்கு எதிராக 2 ஓவர்களில் 46 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.
அக்சர், வருண்
ஜிம்பாப்வேக்கு எதிராக அணிக்கு திரும்பிய அக்சர் ஒரு விக்கெட் வீழ்த்தினார். சுழற்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் அக்சர் படேல் அணியில் தொடர்வார். ஆகவே வாஷிங்டன் சுந்தருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காது. அதே வேஎளையில் சூப்பர் 8 சுற்றில் வருண் சக்கரவர்த்தி தனது திறமைக்கேற்ப செயல்படவில்லை. இரண்டு போட்டிகளிலும் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தார். ஆனால் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்திய அணி பிளேயிங் லெவன்
ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் பாஸ்ட் பவுலிங், ஸ்பின் பவுலிங், பேட்டிங் வரிசை என அனைத்திலும் இந்திய அணி சரியான கலவையில் உள்ளதால் பிளேயிங் லெவனில் எந்த மாற்றமும் இருக்காது என தகவல் வெளியாகி உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி உத்தேச பிளேயிங் லெவன்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங் மற்றும் வருண் சக்கரவர்த்தி.

