MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • ரிங்கு சிங்கின் தந்தை மரணம்.. சிலிண்டர் சுமந்தே மகனை சிகரம் தொட வைத்த நிஜ ஹீரோ.. ரசிகர்கள் ஷாக்!

ரிங்கு சிங்கின் தந்தை மரணம்.. சிலிண்டர் சுமந்தே மகனை சிகரம் தொட வைத்த நிஜ ஹீரோ.. ரசிகர்கள் ஷாக்!

தான் கடினமான வேலை செய்தாலும் தனது மகனை பெரிய ஆளாக்க வேண்டும் என நினைத்த அவர் சிலிண்டர்களை சுமந்தே அதில் வரும் சொற்ப வருமானத்தை வைத்துக் கொண்டு மகன் கிரிக்கெட் பயிற்சி எடுக்க பெரும் முயற்சி எடுத்தார்.

2 Min read
Author : Rayar r
Published : Feb 27 2026, 03:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ரிங்கு சிங்கின் தந்தை மரணம்
Image Credit : X

ரிங்கு சிங்கின் தந்தை மரணம்

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிங்கு சிங்கின் தந்தை கான்சந்த் சிங் இன்று (பிப்ரவரி 27) காலமானார். கடந்த சில மாதங்களாக நான்காம் நிலை கல்லீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த கான்சந்த் சிங், அண்மையில் உடல்நிலை அபாய கட்டத்தை எட்டியதால் உத்தரபிரதேசத்தின் நொய்டாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

24
இந்திய வீரர்கள் ஆறுதல்
Image Credit : X

இந்திய வீரர்கள் ஆறுதல்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்தியாவின் முதல் சூப்பர் 8 போட்டிக்குப் பிறகு தந்தையின் உடல்நிலை மோசமடைந்ததை கேள்விப்பட்ட ரிங்கு சிங் சென்னையில் இருந்து அவசரமாக மருத்துவமனை திரும்பி தந்தையை பார்த்து விட்டு மீண்டும் அணிக்கு திரும்பியிருந்தார். 

இந்த நிலையில் தான் கான்சந்த் சிங் இன்று சிகிச்சை பலனின்றி காலமாகியுள்ளார். தந்தையின் மறைவு செய்தியை கேட்டு சோகத்தில் மூழ்கிய ரிங்கு சிங் உடனடியாக வீடு திரும்பினார். தந்தையை இழந்து வாடும் அவருக்கு இந்திய முன்னாள், இந்நாள் வீரர்கள், ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Related image1
இந்திய வீரர் ரிங்கு சிங்கை கரம் பிடிக்கும் சமாஜ்வாடி எம்.பி! யார் இந்த பிரியா சரோஜ்?
Related image2
டி20 உலகக்கோப்பை.. பாதியிலேயே வெளியேறிய ரிங்கு சிங்.. ரசிகர்கள் ஷாக்.. என்ன நடந்தது?
34
சிலிண்டர் சுமந்து மகனை பெரிய ஆளாக்கிய தந்தை
Image Credit : X

சிலிண்டர் சுமந்து மகனை பெரிய ஆளாக்கிய தந்தை

ரிங்கு சிங்கின் குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம் ஆகும். ரிங்கு சிங்கின் தந்தை வீடுகளுக்கு கேஸ் சிலிண்டர்களை விநியோகம் செய்யும் வேலை செய்து வந்தார். தான் கடினமான வேலை செய்தாலும் தனது மகனை பெரிய ஆளாக்க வேண்டும் என நினைத்த அவர் சிலிண்டர்களை சுமந்தே அதில் வரும் சொற்ப வருமானத்தை வைத்துக் கொண்டு மகன் கிரிக்கெட் பயிற்சி எடுக்க பெரும் முயற்சி எடுத்தார்.

44
ரிங்கு சிங்கின் தந்தைக்கு ரசிகர்கள் புகழாரம்
Image Credit : X

ரிங்கு சிங்கின் தந்தைக்கு ரசிகர்கள் புகழாரம்

குடும்ப சூழ்நிலையை அறிந்த ரிங்கு சிங்கும் சிலிண்டர் சுமந்து தனது விடா முயற்சி, கடின பயிற்சியின் மூலம் ஐபிஎல்லில் அறிமுகமாகி தனது திறமையை நிரூபித்து, இப்போது இந்திய அணியிலும் இடம்பிடித்து கலக்கி வருகிறார். சிலிண்டர் சுமந்தே மகனை சிகரம் தொட வைத்த நிஜ ஹீரோவான கான்சந்த் சிங்குக்கு ரசிகர்கள் புகழாரம் சூட்டி வருகின்றனர்.

ரிங்கு சிங்குக்கு அதிக சான்ஸ் இல்லை

நடப்பு டி20 உலகக் கோப்பையில் ரிங்கு சிங் பீல்டிங்கில் கலக்கினாலும் பேட்டிங்கில் எதிர்பார்த்த அளவுக்கு செயல்படவில்லை. ஐந்து இன்னிங்ஸ்களில் 24 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இரண்டு முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். மிகக் குறைவான பந்துகள் மீதமிருக்கும்போதே அவர் களமிறங்கினார். 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முக்கியமான ஆட்டத்தில் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். இதனால் ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் இந்திய பிளேயிங் லெவனில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டி20 உலகக் கோப்பை
விளையாட்டு
இந்திய கிரிக்கெட் அணி

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs WI: இந்தியாவுக்கு முக்கியமான போட்டி; ஒருவேளை மழையால் ரத்தானால் என்னாகும்? அரையிறுதி வாய்ப்பு பறிபோகுமா?
Recommended image2
ஜிம்பாப்வேயை ஊதித்தள்ளிய இந்தியா.. அரையிறுதி செல்ல இனி என்ன செய்ய வேண்டும்?
Recommended image3
ஹர்திக், அபிஷேக், திலக் ருத்ரதாண்டவம்.. தெறிக்க விட்ட இந்தியா.. 4 ரன்னில் உலக சாதனை மிஸ்ஸிங்!
Related Stories
Recommended image1
இந்திய வீரர் ரிங்கு சிங்கை கரம் பிடிக்கும் சமாஜ்வாடி எம்.பி! யார் இந்த பிரியா சரோஜ்?
Recommended image2
டி20 உலகக்கோப்பை.. பாதியிலேயே வெளியேறிய ரிங்கு சிங்.. ரசிகர்கள் ஷாக்.. என்ன நடந்தது?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved