சமாஜ்வாடி கட்சியின் எம்.பி. பிரியா சரோஜ்க்கும் இந்திய வீரர் ரிங்கு சிங்குக்கும் திருமணம் நடைபெற உள்ளது. யார் இந்த பிரியா சரோஜ்? என்பது குறித்து பார்ப்போம்.

Who is Priya Saroj, who will marry Rinku Singh?: உத்தரபிரதேசத்தின் மச்லிஷஹர் தொகுதியிலிருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அரசியலில் வளர்ந்து வரும் சமாஜ்வாடி கட்சியின் பிரியா சரோஜ்க்கும், இந்திய அணி வீரர் ரிங்கு சிங்குக்கும் வரும் ஜூன் 8ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது. அதன்பிறகு நவம்பர் மாதம் 18ம் தேதி இருவருக்கும் வாரணாசியில் திருமணம் நடைபெற உள்ளது.

ரிங்கு சிங் பிரியா சரோஜ் திருமணம்

உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் உள்ள கார்கியான் கிராமத்தைச் சேர்ந்த பிரியா சரோஜ், இந்தியாவின் இளைய எம்.பி.க்களில் ஒருவராக தனது அந்தஸ்தை உறுதிப்படுத்தியுள்ளார். இவரது தந்தை துஃபானி மூன்று முறை எம்.பி.யாக இருந்துள்ளார். தற்போது எம்.எல்.ஏ.வாகவும் இருக்கிறார். 2024 ஆம் ஆண்டு சமாஜ்வாடி கட்சியின் முதல் முறையாக எம்.பி.யாக அரசியலில் நுழைந்த பிரியா, பாஜக மூத்த தலைவர் பி.பி. சரோஜை 35,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

யார் இந்த பிரியா சரோஜ்?

அரசியல் பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தாலும், பிரியா சரோஜின் ஆரம்பகால வாழ்க்கை லட்சியங்கள் அரசியலில் இருந்து வெகு தொலைவில் இருந்தன. "வளர்ந்தபோது, ​​அரசியலில் அடியெடுத்து வைப்பேன் என்று நான் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை" என்று பிரியா இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். "சட்டத்தில் பட்டம் பெற்ற பிறகு, கொரோனா தொற்றுநோய்களின் போது நீதிபதி தேர்வுகளுக்கு நான் தயாராகி வந்தேன். எனக்கு தேர்தலில் சீட் வழங்கப்பட்யிருந்தபோதும் அந்த தேர்வுகளுக்கான ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொண்டிருந்தேன்'' என்று அவர் கூறியிருந்தார்.

பிரியா சரோஜ் என்ன படித்துள்ளார்?

பிரியா தனது கல்வியை புதுதில்லியில் உள்ள விமானப்படை கோல்டன் ஜூபிலி நிறுவனத்தில் முடித்தார், அதைத் தொடர்ந்து டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் நொய்டாவில் உள்ள அமிட்டி பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்தார். அரசியலில் நுழைவதற்கு முன்பு, அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பயிற்சி பெற்றார். அவரது சட்ட நிபுணத்துவமும் புதிய கண்ணோட்டமும் அவரை அவரது தொகுதியிலும் அதற்கு அப்பாலும் செல்வாக்கு மிக்க நபராக நிலைநிறுத்தியுள்ளன.

பிரியாவுக்கும், ரிங்குவுக்கும் காதல் மலர்ந்தது எப்படி?

ஒரு ஹோட்டல் விருந்தில் வைத்து பிரியா சரோஜ்க்கும், ரிங்கு சிங்குக்கும் பழக்கம் ஏற்பட்டது. முதலில் இருவரும் நட்பாக பழகிய நிலையில், இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பிரியா சரோஜின் தோழியின் தந்தையும் ஒரு கிரிக்கெட் வீரர் தான். அவர் மூலமாகத்தான் பிரியாவுக்கும், ரிங்கு சிங்குக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.