MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • ஜிம்பாப்வேயை ஊதித்தள்ளிய இந்தியா.. அரையிறுதி செல்ல இனி என்ன செய்ய வேண்டும்?

ஜிம்பாப்வேயை ஊதித்தள்ளிய இந்தியா.. அரையிறுதி செல்ல இனி என்ன செய்ய வேண்டும்?

டி20 உலகக்கோப்பையில் சூப்பர் 8 போட்டியில் இந்திய அணி ஜிம்பாப்வேயை ஊதித்தள்ளி அபார வெற்றி பெற்றது. இந்திய அணி இனி அரையிறுதிக்குள் செல்ல என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar r
Published : Feb 26 2026, 11:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
இந்தியா vs ஜிம்பாப்வே சூப்பர் 8 போட்டி
Image Credit : X@BCCI

இந்தியா vs ஜிம்பாப்வே சூப்பர் 8 போட்டி

டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்று போட்டியில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து 256 என்ற இமாலய ஸ்கோர் குவித்தது. 

சஞ்சு சாம்சன் 15 பந்துகளில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 24 ரன்கள் எடுத்தார். அபிஷேக் சர்மா 30 பந்துகளில் 4 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 55 ரன்கள் அடித்தார். ஹர்திக் பாண்ட்யா 23 பந்தில் 4 சிக்சர்கள், 2 பவுண்டரியுடன் 50 ரன்களும், திலக் வர்மா 16 பந்தில் 4 சிக்சர்கள், 3 பவுண்டரியுடன் 44 ரன்களும் எடுத்தனர்.

23
இந்திய அணி அபார வெற்றி
Image Credit : Getty

இந்திய அணி அபார வெற்றி

பின்பு இமாலய இலக்கு நோக்கி பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 184 ரன்கள் மட்டுமே எடுத்து 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அந்த அணியில் அட்டகாசமாக விளையாடிய பிரையன் பென்னட் 59 பந்துகளில் 8 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 97 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

கேப்டன் சிக்கந்தர் ராசா 21 பந்தில் 31 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களில் 24 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார். வருண் சக்கரவர்த்தி, அக்சர் படேல் தலா 1 விக்கெட் வீழ்த்தினார்கள். ஹர்திக் பாண்ட்யா ஆட்டநாயகன் விருது வென்றார்.

Related Articles

Related image1
கோல்டன் சான்ஸை வீணாக்கிய சஞ்சு சாம்சன்.. பார்முக்கு திரும்பிய அபிஷேக் சர்மா.. அதிரடியில் கலக்கல்!
Related image2
ஹர்திக், அபிஷேக், திலக் ருத்ரதாண்டவம்.. தெறிக்க விட்ட இந்தியா.. 4 ரன்னில் உலக சாதனை மிஸ்ஸிங்!
33
அரையிறுதி செல்ல என்ன செய்ய வேண்டும்?
Image Credit : Getty

அரையிறுதி செல்ல என்ன செய்ய வேண்டும்?

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையுறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது. மார்ச் 1ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட உள்ளது. இதுவும் இந்திய அணிக்கு வாழ்வா? சாவா? போட்டியாகும். இதில் வெற்றி பெற்றால் அரையிறுதி சென்று விடும். தோற்றால் டி20 உலகக்கோப்பையை விட்டு வெளியேறி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

டி20 உலகக்கோப்பையில் சூப்பர் 8 போட்டியில் இந்திய அணி ஜிம்பாப்வேயை ஊதித்தள்ளி அபார வெற்றி பெற்றது. இந்திய அணி இனி அரையிறுதிக்குள் செல்ல என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டி20 உலகக் கோப்பை
விளையாட்டு
இந்திய கிரிக்கெட் அணி

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஹர்திக், அபிஷேக், திலக் ருத்ரதாண்டவம்.. தெறிக்க விட்ட இந்தியா.. 4 ரன்னில் உலக சாதனை மிஸ்ஸிங்!
Recommended image2
கோல்டன் சான்ஸை வீணாக்கிய சஞ்சு சாம்சன்.. பார்முக்கு திரும்பிய அபிஷேக் சர்மா.. அதிரடியில் கலக்கல்!
Recommended image3
அர்ஜுன் டெண்டுல்கர் - சானியா லவ் ஸ்டோரி.. தூது சென்ற சாரா.. சுவாரஸ்யமான பின்னணி!
Related Stories
Recommended image1
கோல்டன் சான்ஸை வீணாக்கிய சஞ்சு சாம்சன்.. பார்முக்கு திரும்பிய அபிஷேக் சர்மா.. அதிரடியில் கலக்கல்!
Recommended image2
ஹர்திக், அபிஷேக், திலக் ருத்ரதாண்டவம்.. தெறிக்க விட்ட இந்தியா.. 4 ரன்னில் உலக சாதனை மிஸ்ஸிங்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved