Rathnam: 'ரத்னம்' படத்தில் இந்த சிங்கிள் ஷாட் எடுக்க படக்குழு இவ்வளவு கஷ்டபட்டங்களா? வெளியான மேக்கிங் வீடியோ!

நடிகர் விஷால் நடிப்பில் நாளை வெளியாக உள்ள ரத்னம் படத்தின், சிங்கிள் ஷாட் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.
 

Share this Video

இயக்குனர் ஹரி, நடிகை விஷாலை வைத்து மூன்றாவது முறையாக இயக்கியுள்ள திரைப்படம் 'ரத்னம்'. ஏப்ரல் 26-ம் தேதி, அதாவது நாளை வெளியாக உள்ள இந்த படத்தின் புரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது. நேற்றைய தினம் கூட புதுவைக்கு வந்த இயக்குனர் ஹரி, ரத்தம் படத்தை புதுவை மக்கள் அனைவரும், திரையரங்கிற்கு வந்து பார்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இந்த படத்தில் முதல் முறையாக விஷாலுக்கு ஜோடியாக ப்ரியா பவானி ஷங்கர் நடித்துளளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திர கனி, யோகி பாபு, கவுதம் மேனன் போன்ற பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை ஸ்டோன் பென்ச் சார்பாக கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ளார். விஷால் படத்திற்கு முதல் முறையாக இசையமைத்துள்ளார் தேவி ஸ்ரீ பிரசாத். 

இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியை சிங்கிள் ஷார்ட்டாக எடுக்க எவ்வளவு மேனகைத்தோம் என்பதை, படக்குழுவினர் கூறும் வீடியோ ஒரு வெளியாகியுள்ளது. 

Related Video