Asianet News TamilAsianet News Tamil

கில்லி செம ஹிட்.. தளபதி விஜயை சந்தித்த இயக்குனர் தரணி மற்றும் கில்லி படக்குழு.. தளபதி கையில் காயமா?

தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற கில்லி படம் தற்போது ரீரிலீஸ் செய்யப்பட்டு வெற்றியடைந்துள்ளது. இந்நிலையில் தளபதி விஜயை கில்லி படக்குழு சந்தித்துள்ளனர்.

கடந்த 2004-ம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி இயக்குநர் தரணி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் கில்லி. விஜய்யின் கரியரில் முக்கியமான படமாக அமைந்த இப்படத்தில் த்ரிஷா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான ஒக்கடு படத்தின் ரீமேக் தான் கில்லி. தற்போது படம் வெளியான 2 நாட்களில் ரூ.12 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தின் வரவேற்பை தொடர்ந்து, படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர் சக்திவேலன் நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து மாலை அணிவித்தார். 

அப்போது அவர், அரசியலுக்கும், மக்களுக்கும் நீங்கள் நிறைய நேரத்தை செலவிடுங்கள். ஆனால், வருடத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க. வியாபாரம் என்பதை தாண்டி, திரையரங்குகளில் கூஸ்பம்ஸ் தருணமாக உள்ளது” என்று கூறினார். மேலும் தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம், இயக்குனர் தரணி அருகில் இருந்தனர். இதுதொடர்பான வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Video Top Stories