al qaeda: Ayman al-Zawahiri:அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஜவாஹிரி ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார்
அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார் என அமெரிக்க உளவுத்துறை தெரிவித்ததாக சிஎன்என் சேனல் செய்தி வெளியிட்டுள்ளது.
அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார் என அமெரிக்க உளவுத்துறை தெரிவித்ததாக சிஎன்என் சேனல் செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க நேரப்படி இரவு 7.30 மணிக்கு அதிபர் ஜோ பிடன் மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில் " ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் சனிக்கிழமை விமானத்தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு நான் அனுமதியளித்தேன். இந்தத் தாக்குதலில்மக்கள் யாரும் கொல்லப்படவில்லை. நீதி வழங்கப்பட்டுள்ளது, அந்தத் தீவிரவாதி இனி இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.
இலங்கை பொருளாதார சிக்கலுக்கு கோத்தபய ராஜபக்சே காரணம் இல்லை: ரணில் விக்கிரமசிங்கே
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் ஆட்சியைக் கைப்பற்றியபின், அதாவது 2021 ஆகஸ்ட் மாதத்துக்குப்பின், அமெரிக்கா நடத்திய முதல் ட்ரோன் தாக்குதல் இதுவாகும்.
2011ம் ஆண்டு அல் கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவராக இருந்த ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டபின், அமைப்பை வழிநடத்தி வந்த ஜவாஹிரி கொல்லப்பட்டது அந்த அமைப்பின் அழிவுக்கான படியாகும் என்று அமெரிக்க சிஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
adolf hitler: ஹிட்லர் பயன்படுத்திய கைக் கடிகாரம் ரூ.8.71 கோடிக்கு ஏலம்: யூதத் தலைவர்கள் எதிர்ப்பு
தலிபான் செய்தித்தொடர்பாளர் ஜபிபுல்லா முஜாஹித் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “ கடந்த ஜூலை 31ம் தேதி, காபூலில் உள்ள செர்பூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது. முதலில் இந்த தாக்குதல் எப்படி நடந்தது என்பது தெரியவில்லை. அதன்பின் நடத்தப்பட்ட விசாரணையில் இது அமெரிக்க ராணுவத்தினரின் ட்ரோன் விமானம் நடத்திய தாக்குதல் என்பது தெரியவந்தது. இந்தத் தாக்குதலை ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகம் கடுமையாக கண்டிக்கிறது. இது சர்வதேச கொள்கைகளையும், தோஹா ஒப்பந்தத்தையும் மீறிய செயலாகும்” எனத் தெரிவித்துள்ளார்.
அமெரி்க்க சிஐஏ அதிகாரிகள் தரப்பில் கூறியதாக சிஎன்என் வெளியிட்ட செய்தியில் “அதிபர் ஜோ பிடனின் உத்தரவின்படி, காபூல் நகரில் உள்ள அல் கொய்தா தீவிரவாத அமைப்பின தலைவர் அல்ஜஹாரி இல்லத்தின் மீது இரு ட்ரோன்கள் கடந்த மாதம் 31ம் தேதி இரவு 9.48 மணிக்கு வான்வழித் தாக்குதல் நடத்தின” எனத் தெரிவி்த்தனர்.
எகிப்து நாட்டைச் சேர்ந்த கண் மருத்துவராக இருந்த அல் ஜவாஹிரி, அல்கொய்தா அமைப்பின் தலைவராக இருந்த ஓசாமா பின்லேடனின் உதவியாளராக இருந்தார். கடந்த 2011ம் ஆண்டு ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டபின், அந்த அமைப்பின் தலைவராக அல் ஜஹாரி பொறுப்பேற்றார்.
அமெரிக்காவில் 2001ம் ஆண்டில் அல்கொய்தா நடத்திய தாக்குதலில் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டதில் 3ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு மூளையாக இருந்தவர் அல் ஹவாஹிரி. இவரின் தலைக்கு 25 மில்லியன் டாலரை அமெரிக்கா விலை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்த இங்கிலாந்து பிரதமர் யார்? முந்தும் லிஸ் டிரஸ்.. அப்போ ரிஷி சுனக் நிலைமை ?
இதற்கு முன் பலமுறை அமெரிக்க ட்ரோன்கள் நடத்திய தாக்குதலில் அல் ஜஹாரி கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அது உறுதி செய்யப்படவில்லை. அவர் உடல்நலக்குறைவால் அவதிப்படுவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், இந்தமுறை அல்ஜஹாரி கொல்லப்பட்டதை அமெரிக்க சிஐஏ மற்றும் அதிபர் பிடன் எவ்வாறு உறுதி செய்தார்கள் என்பது தெரியவில்லை.