MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உலகம்
  • UK Cost of Living: ஒரு கிலோ வெண்டைக்காய் ₹1000-ஆ? UK-வில் காய்கறி விலையை கேட்டா மயக்கமே வந்திடும்!

UK Cost of Living: ஒரு கிலோ வெண்டைக்காய் ₹1000-ஆ? UK-வில் காய்கறி விலையை கேட்டா மயக்கமே வந்திடும்!

UK Cost of Living: இந்தியாவில் கிலோ ₹50-க்கு விற்கும் வெண்டைக்காய், UK-வில் ₹1000 என்றால் நம்ப முடிகிறதா? அங்குள்ள இந்தியர்கள் காய்கறிகளுக்காக படும் கஷ்டத்தை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Jul 23 2026, 05:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
UK வில் இந்தியர்கள் வாழ்க்கை அவ்வளவு சுலபமல்ல UK Cost of Living
Image Credit : Gemini AI

UK-வில் இந்தியர்கள் வாழ்க்கை அவ்வளவு சுலபமல்ல - UK Cost of Living

UK-க்கு வேலைக்கோ, படிப்புக்கோ செல்பவர்கள் மாதம் ₹2-3 லட்சம் சம்பாதித்து சொகுசாக வாழ்கிறார்கள் என பலரும் நினைக்கிறார்கள். ஆனால், நிஜ நிலைமை வேறு. 'Praveen’s Planet' என்ற யூடியூப் சேனல், அங்குள்ள இந்தியர்கள் சந்திக்கும் விலைவாசி உயர்வை தெளிவாகக் காட்டுகிறது.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
கண்ணைக் கட்டும் காய்கறி விலைகள்
Image Credit : Gemini AI

கண்ணைக் கட்டும் காய்கறி விலைகள்

யூடியூபர் பிரவீன், UK-ல் உள்ள ஒரு இந்தியன் சூப்பர் மார்க்கெட்டில் காய்கறி விலைகளை காட்டுகிறார். பவுண்ட்களில் இருக்கும் விலையை இந்திய ரூபாய்க்கு மாற்றும்போது, நம்ம ஊரில் ₹50-க்கு கிடைக்கும் காய்கறி அங்கே பல நூறு ரூபாய்க்கு விற்கப்படுவது அதிர்ச்சியளிக்கிறது.

Related Articles

Related image1
American Life : அமெரிக்காவில் தினமும் சமைக்க மாட்டாங்களா? அப்பறம் என்ன சாப்பிடுவாங்க?
Related image2
Interesting Facts: அமெரிக்காவில் குழந்தையை அடித்தால் என்ன ஆகும் தெரியுமா? சிறை தண்டனை கிடைக்குமா? சட்டம் சொல்வது என்ன?
36
UK சூப்பர் மார்க்கெட்டில் விலை பட்டியல்
Image Credit : Gemini AI

UK சூப்பர் மார்க்கெட்டில் விலை பட்டியல்

பச்சை மிளகாய், பீர்க்கங்காய்: கிலோ சுமார் ₹850. பாகற்காய், கோவைக்காய், வெண்டைக்காய்: கிலோ ₹1,000. எலுமிச்சை: கிலோ ₹800. ஒரு சிறிய முருங்கைக்காய் கட்டு சுமார் ₹1,000. 10 கிலோ சோனா மசூரி அரிசி பை £15 (சுமார் ₹1,600 - ₹1,700). 250 கிராம் அரிசி மாவு பாக்கெட் விலை ₹250.
46
நடுத்தர வர்க்க இந்தியர்களின் தவிப்பு
Image Credit : Gemini AI

நடுத்தர வர்க்க இந்தியர்களின் தவிப்பு

நடுத்தர வர்க்க குடும்பங்களிலிருந்து UK வந்த இந்தியர்கள், கிலோ வெண்டைக்காய்க்கு ₹1,000 கொடுத்து வாங்கத் தயங்குகிறார்கள். 'லட்சங்களில் சம்பாதித்தாலும், ஒரு கிலோ காய்கறிக்கு இவ்வளவு செலவு செய்ய மனம் ஒப்பவில்லை. இங்கு வாழும் நடுத்தர இந்தியர்கள், தின்பதற்கும் திண்டாடி, வாழ்வதற்கும் போராடுகிறோம்' என அந்த யூடியூபர் வேதனையுடன் கூறுகிறார்.
56
ஏன் இந்த அநியாய விலை உயர்வு?
Image Credit : Getty

ஏன் இந்த அநியாய விலை உயர்வு?

வெண்டை, பாகற்காய் போன்ற காய்கறிகள் UK-யின் குளிரான தட்பவெப்பத்தில் விளையாது. இவற்றை இந்தியாவிலிருந்து விமானம் (Air Freight) மூலமே இறக்குமதி செய்ய வேண்டும். விமான எரிபொருள், கோல்டு ஸ்டோரேஜ் செலவுகள் அதிகம். மேலும், UK உணவு பாதுகாப்பு ஏஜென்சியின் கடுமையான SPS (Sanitary and Phytosanitary) விதிகள், பரிசோதனைக் கட்டணங்கள், Brexit-க்குப் பிறகான ஓட்டுநர் பற்றாக்குறை போன்றவையும் விலை உயர்வுக்கு முக்கிய காரணங்கள்.
66
எல்லா கடைகளிலும் கிடைக்காது
Image Credit : Gemini AI

எல்லா கடைகளிலும் கிடைக்காது

இந்த காய்கறிகள் பிரிட்டனின் உள்ளூர் சூப்பர் மார்க்கெட்களில் கிடைக்காது. ஆசிய ஸ்டோர்களில் மட்டுமே விற்கப்படுகின்றன. குறைந்த அளவில் இறக்குமதி செய்யப்படுவதால், கடைக்காரர்கள் அதிக லாபம் வைத்து விற்கிறார்கள். சம்பளம் பவுண்ட்களில் வந்தாலும், இந்த இறக்குமதி பொருட்களின் விலையால், சாதாரண இந்தியர்கள் கடும் நிதிச் சிக்கலை சந்திக்கின்றனர்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
உலகம்
இந்தியா
Latest Videos
Recommended Stories
Recommended image1
Green Chilli Price : 100 கிராம் மிளகாய் 400 ரூபாயா? பாவம் இந்த மக்கள்! வைரலாகும் வீடியோ!
Recommended image2
American Life : அமெரிக்காவில் தினமும் சமைக்க மாட்டாங்களா? அப்பறம் என்ன சாப்பிடுவாங்க?
Recommended image3
Petrol Price : 1 லிட்டர் பெட்ரோல் வெறும் 3 ரூபாய்தான்! எங்க தெரியுமா?
Related Stories
Recommended image1
American Life : அமெரிக்காவில் தினமும் சமைக்க மாட்டாங்களா? அப்பறம் என்ன சாப்பிடுவாங்க?
Recommended image2
Interesting Facts: அமெரிக்காவில் குழந்தையை அடித்தால் என்ன ஆகும் தெரியுமா? சிறை தண்டனை கிடைக்குமா? சட்டம் சொல்வது என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved